பக்கம் எண் :

162

4. உள்ளசராசரம் எல்லாம் வள்ளலேஉன் நாபிமலர்ப்
  பொள்ளலில் வந்தும் ஒருவர் பிள்ளைஎன நீவந்தது
    ஞாயமோ - இதென்ன மாயமோ-சேற்றிலே
    மேயும்பிள்ளை பூச்சிபோலே தோயவும் தோயாதஉன்னை (அறி)

5. வேதத்தின்மேலே வேதாந்த நாதத்தின் மேலே ஞானிகள்
   போதத்தின் மேலே விளங்கும் பாதத்தை என்மேலே வைத்தாய்
   யோக்கியனோ-அடியேன்-சிலாக்கியனோ-சுருதிசொல்
   வாக்கியனே சுவாமிஎனது பாக்கியமே பாக்கியம் உன்தன்னை(அறி)

6. பாகண்டு சொல்லாளை இந்த நாய் கண்டதென்று கொள்ளாதே
  தாய்கண்டு பொறுக்காதத்தை ஊரோகண்டு பொறுக்கும் மலர்த்
   தாமனே-பன்னிரு நாமனே - எவர்க்கும்
   வமானே எனும்சீதாபி ராமனே உன்பெருமையை (அறி)

-------

தண்டகவனரிஷிகள் ஸ்ரீராமரோடு முறையிடல்

விருத்தம்-3

    துதிவிரா தன்வணங்கி உயரப் போனான்
          சுவாமிசர பங்கன் ஆசிரமத்தில் போனான்
    அதில் எதிர்கண் டிந்திரனும் போனான் ராமன்
         அருளமுனி தம்பதியோ டளவிப் போனான்
    கதிதருதண் டகவனத்து முனிவர் தம்மைக்
         கண்டுகனி யமுதையன் உண்டி ருந்தான்
    சதிசெயும் ராக்ஷதராலே கொஞ்சச்சீவன்
         தரிக்கின்றார் அவர்கள் கையை விரிக்கின்றாரே

திபதை-2

புன்னாகவராளி ராகம்                          ஆதிதாளம்

கண்ணிகள்

1. ராமபத்திரா ராமச்சந்திரா ராமா ஆ            சீர்வாதம்
  பூமிச்சுமை கழிக்கும் தர்மபுத்திராஆ            சீர்வாதம்

2. அரக்கர்கையால் நெருக்கியிட ஆலைக்கரும்      பெனத்தானே
  நெருக்கிடையாய் வருந்தும் எம்மைநிலை நிறுத்தாய் எங்கோனே