163 3. விழல்எனராட் சதநெருப்பால் வெதும்புகிறோம் ஒருகாலே மழைமுகம்கண்டிடும் பயிர்போல் மகிழ்ந்தோம்நீ வரலாலே 4. புரைசேரும் ராட்சதரால் பூனைகளாய்ப் போனோமே அரைசேஉன் வரவுகண்டோம் ஆனைகள்போல் ஆனோமே 5. வள்ளல்தச ரதன்மகனே மனக்கவலை தீராயோ எள்ளளவுன் கிருபைக் கண்ணால் எங்கள்முகம் பாராயோ 6. பஞ்சுபறந்தாலும் அய்யா படியுமல்லோ ஒருதேசம் நெஞ்சுபறந்திடு மதற்கு நிலைகாணோம் லவலேசம் 7. உத்தமனே அரக்கரை வேரொடும் பிடுங்கி எறிவாயே இத்தனைபேர் செயுந்தவங்கள் எல்லாம்நீ பெறுவாயே 8. புலிக்கூட்டம் திரிகாட்டில் புகுந்திடும்மான் எனநாமே கலிக்கி ராட்ச தர்திரியும் காட்டில்இருக் கின்றோமே 9. இயற்கைகுலைந் தரக்கர்களால் இறந்து விட்டோம் பேர்நாமம் வயிற்றினில் வாள் கட்டிக்கொண்டு மறந்துவிட்டோம் செபஓமம் 10. உங்காரம் செயில் அரக்கர் உலகில்என்ன படுவாரோ இங்கேநீ இருக்கிலவர் எட்டியும் பார்த் திடுவாரோ ------ ஸ்ரீராமர் தண்டகவன ரிஷிகளுக்கு அபயமீதல் விருத்தம்-4 தருக்களும்; மலையும் சூழ்ந்த தண்டக வனத்தோ ரிந்த வருத்தம்ஆம் மொழியைக் கேட்டான் வணங்கியே ராமன் நீங்கள் செருக்கியே தவங்கள் செய்வீர் தேவரீர்க் கேவ லாளாய் இருக்கிறேன் அரக்கர் துன்பம் இனிவிடும் எனச்சொல் வானே தரு-2 கலியாணிராகம் அடதாள சாப்பு பல்லவி அஞ்சா திருங்கள் சந்நியாசிகளே - தண்டக ஆரண்ய வாசிகளே (அஞ்சா) |