பக்கம் எண் :

164 

அநுபல்லவி

அஞ்சா திருங்கள் உங்கள் ஆசீர்வா         தந்துணை
     அப்புறம் ராட்டதர்க் குண்டென்கை     யிலக்கனை
செஞ்சா மாருதம் போலவே நொ            டிக்கிறேன்
     பஞ்சாகப் பறந்தோட அ             டிக்கிறேன் (அந்)

சரணங்கள்

1. கண்டோரைக் கொல்லுவேன்         கொல்லாமல்-விட்டால்
     காகுத்தன் என்றுநீர்             சொல்லாமல்
  மண்டி எதிர்த்து முன்              நில்லாமல்-காலில்
     வந்து வணங்கினார்             அல்லாமல்
  எண்டிசைமேல் அவராலே           ஆனமட்டும்
     ராட்சத சேனைகள் வந்துபோ     ராடட்டும்
  அண்டபகிரண்டம் ஆ              யிரத்தெட்டும்
     அப்புறம் போனாலும் என்கணை   யேஎட்டும் (அஞ்)

2. அந்தண ராலே                   பசுவாலே-தங்கள்
     ஆவிகொடுத்தவர்              விண்மேலே
  முந்திய தேவர்க்கும்               அப்பாலே-சொல்லும்
     மூர்த்திகள் ஆவார்             அதனாலே
  இந்திரன் ஆனதேவன் வந்து        தடுக்கிறேன்
     என்றாலும் ராட்சதப் போரில்     அடுக்கிறேன்
  சுந்தர கோதண்ட வாளி            விடுக்கிறேன்
     சூரியனைக் கண்ட பனிபோல்     ஒடுக்கிறேன் (அஞ்)

3. மங்கியே தாயார்                  நிலங்கீற-முடி
     மன்னன் உயிரும்               தடுமாற
  எங்கள் பரதனும்                  வேசாற - நான்
     ஏன்வந்தேன் என்சென்மம்       ஈடேற
  உங்கள் பணிவிடை நானே          பொறுக்கிறேன்
     உக்கிர கோதண்டத் தில்நாணி    இறுக்கிறேன்
  எங்கெங்கும் என்கணையாலே        நொறுக்கிறேன்
     ராட்சதப் பூண்டெல்லாம் வேரோ  டறுக்கிறேன் (அஞ்)