165 ஸ்ரீ ராமர் பஞ்சவடி தீரத்தைக் காணுதல் விருத்தம்-5 அருள்முனிவர்க் கிந்தவகை தேற்றித் தண்ட காரணியந் தனிற்பத்து வருஷம் நீக்கி வரும்வழியில் வதிஷ்டமுனி தவமும் கொண்டு வந்தகஸ்தி முனிவரனை வணங்கி அன்னான் தருசிலையும் புரமெரித்த கணையும் கூடும் சங்கையிலா தேதரித்த துங்க ராமன் பரிவுள தம்பியும் சனகிதானும் செல்லும் படிகொண்டான் பிறகுபஞ்ச வடிகண்டானே ----- ஸ்ரீ ராமர் சடாயுவைக் கண்டு பஞ்சவடி தங்கல் அகஸ்திய முனியை அனுப்பிக்கொண் டந்தவ ழியிற் சடாயுவெனும் தகப்பன் உரைகொண்டவன் சாட்டத்தருநீர் கோதா விரிதாண்டி சகிக்கும் இளையோன் செய்தபர்ன ச்சாலை தனிலே சனகியுடன் மிகுத்தோர் பஞ்ச வடியிலுள்ளோர் விருந்தாய் ராமன் இருந்தானே தரு-3 அடாணா ராகம் ஆதிதாளம் பல்லவி இருந்தானே ராமச்சந்திரன்-பஞ்சவடியில் இருந்தானே ராமச் சந்திரன் (இருந்) சரணங்கள் 1. இருந்தானே ராமச் சந்திரன் -ரிஷிகளைக் காக்கும் தந்திரன் வருந்த ராட்சதர் கூடி - வரும் வழிதன்னை நாடி (இரு) 2. நிருதர்கள் பசி பார்த்து - நிரைநிரையாக்கை கோத்து வரும் விகாதத்தைத் தீர்த்து-மாமுனி வோரைக் காத்து (இரு) 3. அலைந்த முனிவர் சோகம் - ஆகுலமெல்லாம் போக இலங்கையில் அனுபோக - ராட்சதர்க் கெமன் ஆக (இரு) |