166 4. பலத்த ராட்சதர் ஆட்ட - பாட்டங்கள் எல்லாம் மாட்ட சலித்தபேர் துன்பம் ஓட்ட-தர்மத்தை நிலைநாட்ட (இரு) ------ சூர்ப்பநகை ஸ்ரீ ராமரைக் கண்டு மோகித்தல் இருந்தரா கவன்பூமேனி எழில்எல்லாம் நோக்கி ஆசை புரிந்தசூர்ப் பநகை லங்கா புரிராவ ணற்குத் தங்கை அருந்தும்மோ கத்தால் ஐயன் அடிமுடி அளவும் கண்டு தெரிந்துள்ளே எண்ணி நெஞ்சம் திருகுவாள் உருகு வாளே திபதை-3 நீலாம்பரிராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. தேவனோ மனிதன் தானோ - யாவனோ யௌனம் உள்ள சித்தனோ-இவன்-கர்த்தனோ-பிரமன் பாவனையாற் கண்டபெண்கள்-ஆவியைக்கொள்ளை கொளென்று படைத்தானோ-என்னை-உடைத்தானோ 2. எட்டானைக்கையும் இவன்கை-மட்டாமோ சொரசொரென்ன இருக்குமே-உள்ளே-சுருக்குமே-முன்னே பட்டமன்மதன் தவம்செய்-திட்டிந்த உருவாய்ப்புறப் பட்டானோ-தவசு-தொட்டானோ 3. ஈசனுக்கு முக்கண் இந்திர ராசனுக்கோர் ஆயிரங்கண் எண் ஆச்சே - இவற்கிரு-கண்ஆச்சே-இவனைப் பேசினால் என்சாமிஇவன்-கேசவன் தானோ நானொன்றும் பிறியேனே-ஆரோ-அறியேனே 4. புந்திபவளத்தையிவன் - செங்கனிவாய்க் கொப்புச் சொல்லப் போகுமோ-நிகர்-ஆகுமோ-ஐயோ அந்தவார்த்தையைத் துப்பென்ற-நிந்தையால் பவளம் துப்பென்று ஆச்சுதே-உவமை-போச்சுதே 5. முடிவைத்த குழல் சடையா - முடியாவிட்டால் பெண்களெல்லாம் முடியாரோ - மனம் - மடியாரோ இவன் |