167 அடிவைத்த பூமிப்பெண் மேனி - புளகித்தாற் போலல்லோ புல்லை அரும்பினாள் - மெத்த - விரும்பினாள் 6. மரவுரிசேர் இடைபீதாம் பரமதைச் சேராதென்ன மாயமோ - இது - ஞாயமோ - சந் திரன் இவன் முகமென்றாலும் - வரவர அதுக்குங்கலை தேயுமே-களங்கம்-தோயுமே 7. நவஞ்செய்த தாமரைப்பெண்ணும்-செபம் செய்கிறாள் இவன்மார்பில் நாடவோ - வந்து - கூடவோ - ஐயோ தவஞ்செய் வந்தானோ நான்முன்-தவம் செய்ததற்காகக் காட்சி தந்தானோ - தேடி - வந்தானோ 8. ஏலும்இவன் இலக்கணம்-எல்லாம் செய்த அயனே மோசம் இட்டானோ-மதி-கெட்டானோ-இவன் காலின் தூளுக் கொவ்வாஇந்திரன் மேலுலகை ஆள்வதென்ன கர்மமோ-இது-தர்மமோ 9. எடுத்திவன் சுந்தரத்துக்காம்-அடுக்கான பூஷணம் பூணா திருப்பான்என்-அரு-வருப்பான்என்-சும்மா விடுத்தவன் அல்லவோ பொன்னின்-குடத்துக்குப் பொட்டிட்டுப்பார்க்க வேணுமோ அதிகம் - காணுமோ 10. தப்பிலா இவனைச் சேர - இப்படி பிரம்மா எனக்குத் தந்தானோ-இவனும்-வந்தானோ-ஓகோ எப்படி ஆனாலும் இவன் - பொற்புயம் தன்னைச் சேராமல் இருப்பேனோ - ஆவி - தரிப்பேனோ. 11. இந்தவிதம் எண்ணி மலர்ச்-செந்திருப்போல் மாயவேஷம் இட்டாளே-மானம்-விட்டாளே-நல்ல பைந் தொடியாய்ச் சூர்பநகை-வந்துராமச்சந்திரன் முன்னே படர்ந்தாளே-கிட்ட-நடந்தாளே |