168 ஸ்ரீராமர் பக்கல் சூர்ப்பநகை வருதல் விருத்தம்-8 அட்டிசொல்லா தன்னைஉரை கொண்ட ராமன் ஆனைவரு கிறவழியைப் பார்க்கும் சிங்கக் குட்டியைப்போல் அரக்கர்வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவனிருந்த சாலை முன்னே கட்டியிடும் பிணியுள்ளே அடங்கி நாச காலம்வர வெளிவந்தாற் போலே பொல்லா மட்டிரா வணன்குடியை நாசம் செய்யும் வகைவந்தாள் எனச்சூர்ப்ப நகைவந்தாளே தரு-4 பியாகடைராகம் ஆதிதாளம் பல்லவி வந்தாளே - சூர்ப்பநகை - வந்தாளே (வந்) அநுபல்லவி வந்தாளே மன்மத சதகோடி வடிவுள்ள- ராமன்மேல் மயல்மிகநாடி பந்து முலையை முடி பஞ்சவடியைத்தேடி பாவம் செய்யும் நிர்மூடி ராவணன்குடிகேடி (வந்) சரணங்கள் 1. ராவணன் குபேரனுக்குத் தங்கை-பகையில்லாத நன்மைத்துனர் கொண்டுவந்த நங்கை தேவரீருக்கிவள் பெண்டல்ல நீலி சீதைக்குத் தெரியுமோ ராட்சத சோலி ஏவலுக் கெளியவன் நான்அனு கூலி என்றுசொல்லி அரக்கர் துடை காலி (வந்தா) 2. மானிடப் பெண்கொண்டீர் என்ன கண்டோ-என்னுடன் மருவி வாழ்ந்தால் உமக்குப் பயம் உண்டோ ஆனாலும் என்னபாவி கருப்பு வில்லி ஐங்கணை பிளக்குதே என்உடல் கெல்லி சேனைலீலை செய்வேன் நான்காம வல்லி திரட்டுப்பால் குமட்டுதோ உமக்கென்று சொல்லி (வந்தா) |