170 5. உன்வீட்டில் அண்ணனான ராவணன் அறியாமல் உன்கைப் பிடிக்கல் ஆமோ பெண்பாவாய் என்வீட்டில் அண்ணனும்நான் உன்னவள் ஆனபின்பு இசைவதற் கைய மில்லை என்கோவே 6. தன்வீட்டு விளக்கென்று முத்தம் இடுவாருண்டோ தகுதியல்லவே யது பெண்பாவாய் என்வீட்டுக்காரனானால் அரக்கர் உறவு முண்டாம் இந்திரபட்டமும் ஈவேன் என்கோவே 7. அரக்கர் உறவும் பெற்றேன் உன்போகமும் பெற்றேன் அருந்தவம் பலித்ததே பெண்பாவாய் பெருக்கம் என்னசொல்ல என்சுகம் பெற்றபின்பு பெரும்பாக்கியம் வேறுண்டோ என்கோவே 8. தவசிகளுக்கிதெல்லாம் ஏதுக்குக் காட்டினில் தவசே பெரும்பாக்கியம் பெண்பாவாய் தவசி தவசிஎன்று மெள்ள மெள்ளச் சொல்லி தள்ளி விட்டிடல்ஆமோ என்கோவே 9. தனியாக உன்னை நான் கைப்பிடித்தால் உன்தன் சாதியார் என்செய் வாரோ பெண்பாவாய் தனியாய் முருகன் வள்ளி கைப்பிடித்தானே அந்த சாதியார் என்ன செய்தார் என்கோவே 10. அநியாய காரியத்தைப் பயம் இல்லாமல் செய்தால் ஆர்க்கும் சம்மதியாமோ பெண்பாவாய் இனிஇரு வரும்ஒத்தால் ஒருவர்க்கும் பயமில்லை எவர்க்கும் சம்மதி ஆமே என்கோவே 11. ஆனால் மனுஷகணம் ராட்சதகணத்தோடே ஆடுமோ கூடுமோ பெண்பாவாய் நானானால் எப்போதும் தேவருக்கேவல் செய்வேன் ராட்சத சங்கையில்லை என்கோவே 12. சங்கைஏன் என்றாய்க்கு பேரனும் உனக்கொரு தமையன் என்றாய் அல்லோ பெண்பாவாய் தங்கை ஆனாலும் என்ன தமையன் ஆனாலும் என்ன சந்தேகம் உனக்கென்ன என்கோவே |