171 13. அங்கவன் பகை வந்தால் சங்கரன் பகைவரும் எங்கும் பகையாகுமே பெண்பாவாய் திங்கள் சூடியும் மாலும் நான்முகனும் நீயென்றன் திருஷ்டிக்கி காணுகின்ற என்கோவே 14. திருஷ்டிக்குக்கண்டாலும் ஒருத்தி இருக்கவேறே தேவை என்னசொல்வாய் பெண்பாவாய் மட்டுச் சொல்லுகின்றாயோ பெருமரம் சுற்றிய வள்ளி விடுவதுண்டோ என்கோவே 15. விட்டிடுமோ என்றாய் விளையாட் டுப்பூசலிது வினைப்பூசல் ஆகுமோ பெண்பாவாய் தட்டுதலைச் சொல்லி என்னைப்பயம் உறுத்தி தடுத்துவிட்டிடல் ஆமோ என்கோவே 16. ஒட்டாரங் கட்டாதே இளையோன் அறியாமுன்னே ஓடிப்பிழைத்துப் போவாய் பெண்பாவாய் அட்டா துட்டிகள்பேசி அகற்றுகிறாயோ நல்ல தாகட்டும் பார்க்கிறேன் என்கோவே ------ சூர்ப்பநகை தன் உறவை நினைந்து புலம்பல் விருத்தம்-10 வாதாடும் சூர்ப்பநகை தன்னை நோக்கி மணிவண்ணன் எனக்கிந்த மனையாள் சீதை போதாதோ ஓர்உறையில் இரண்டு வாளோ புறங்காக்கும் தம்பிக்கு மனையாள் இல்லை நீதானோ போஎனவே சீதை மேலே நேர்வாளை லட்சுமணன் கூர்வா ளேந்திக் காதோடு மூக்கரிந்த பின்னும் பல்லுக் கருகுவாள் உறவை நினைந் துருகுவாளே திபதை-5 கண்டாராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. அருமைப் பிறப்பே அண்ணேன் ராவணனே-என்னை அருமைத் தங்கச்சி என்ற ராவணனே உன்தன் |