பக்கம் எண் :

172

 கருவிழி போலே காத்த         ராவணனே-என்தன்
     கண்ராவி என்னசொல்வேன்  ராவணனே

2. சிங்கம் இருக்கக்குட்டி         வசமாமோ-உன்தன்
     செல்வத்தங்கை ஒருவர்     தொடப்போமோ-என்னை
  அங்கப்பழுது மனிதன்         செய்வானோ-செய்தும்
     அஞ்சா நெஞ்சு படைத்தும்  உய்வானோ

3. ஊர்க்குருவி உயரப்           பறந்தாலும்-அது
     உயர்ந்த கருடன் ஆமோ    ஒருக்காலும்-இந்த
  பார்க்குள்ளே மனிதர்          மிகுந்தாலும்-உன்தன்
     பாதத் தூளுக் கொப்பாரோ  எக்காலும்

4. எட்டுத் திக்கும் உன்பேரைப்   பழித்தானே-மனிதன்
     என்னையும் கொண்டையைப் பிடித் திழுத்தானே-அய்யோ
  கிட்டிச் செவியரிந்து           முனைந்தானே-உன்னைக்
     கிள்ளுக் கீரையாகவே       நினைந்தானே

5. துணைகும்ப கர்ணா இங்கே    மேவாயோ-என்றும்
     தூக்கப் பேய்பிடித்த நீ     ஆவாயோ-அடா
  பிணமே கரதூஷணா          வாரீரோ-நான்
     பெண்பிறந்து பட்டதைநீர்    பாரீரோ

6. அத்தைமரு மகன்என்ப        திதுதானோ-பிரம்ம
     அஸ்திரம் விட்டால் மனிதன் அழியானோ-இந்திர
  சித்தே என்போல உன்தன்     முனைபோச்சோ-தேவேந்
     திரனை செயித்த தெல்லாம்  விழலாச்சே

7. குட்டி மனிதன் என்னை       வதைத்தானே-என்தன்
     குலை கலங்கிடவே போட்   டுதைத்தானே
  எட்டிப் பார்த்திவன் அண்ணன்  பிரிந்தானே-இவனை
     ஏவிவிட்டறியான் போல்     இருந்தானே

8. இந்திர சந்திரா தியர்கள்       பணிகேட்க-உலகில்
     எந்தெந்த வீரர்களும்       முடிதாழ்க்க-வந்து
  பந்தியிருக்கும் உங்கள்         சபைநேரே-மூக்கும்
     பறிபோய் நான் வருவேனோ துரைமாரே