பக்கம் எண் :

173

சூர்ப்பநகை ஸ்ரீராமருக்கு மீளவும் இதவுரைத்தல்

விருத்தம்-11

    பேய்வடிவாம் அரக்கியிந்தப் படிஅழுதாள் ராமனிடம்
         பின்னும் வந்தாள்
    தேவநீ அறியாதே இளையவன் இப்படி செய்தான்
         செய்தால் என்ன
    கோவமுள்ள இடத்தில் அல்லோ சந்தோஷம் உண்டென்னைக்
         கூட்டிக் கொண்டால்
    ஆவதுமெத் தவும்உண்டு கேள் என்பாள் மருவிஎன்னை
         ஆள்என் பாளே

தரு-5

மோகனராகம்                             அடதாள சாப்பு

பல்லவி

என்னுருவில் கொஞ்சம் கொய்தீர்-எனக்
    கென்ன தாழ்ச்சிநீர் செய்தீர்                (என்) 

அநுபல்லவி 

அன்னியள் ஆகஎன்னைப் பிரிய விடாமல் என்
    அழகுகண் டொருவர்கண் ஏறுபடாமல் (என்) 

சரணங்கள்

1. நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் உம்மை
     நானே சுமந்து கொண்      டெட்டவோ-ஆரும்
  திடுக்கிடவே உம்மை எதிர்த்தபேர் தலைகளைத்
     திருகி மலைமலையாக்       கொட்டவோ-நல்ல
  குடித்தனத்துக்கிவள் ஆகும் ஆகாதென்று
     குறிப்பதின்னம் முட்ட       முட்டவோ-கேட்டால்
  இடுப்பு சீதைக்குக் கொஞ்சம் மூக்கிவளுக்குக் கொஞ்சம்
     என்றெவர்க்கும் சரிக்       கட்டவோ-எண்ணி(என்)

2. குற்றம் போலே செய்து குணம் செய்தீர் என்னைக்கொட்டிக்
     கொள்ளும் காமப் பேயைக்  கொல்லவோ-நல்ல
  பத்தினியாகநின்றிராமல் காய்கனிகளைப்
     பறித்துக் கொண்டுவரச்      சொல்லவோ-உமது