174 அஸ்தம் பட்ட போதே சொந்தம் ஆனேன்இனி அரக்கரை வேரொடும் கெல்லவே-நல்ல புத்தி பண்ணி வைத்துக் கொண்டீர் பொங்கியும் பால் புறம் போகல் ஆகாதென் றல்லவோ-சாமி (என்) 3. பதிக்குப் போகும் போது சீதைக்குமேலான பருவப்பெண் என்முன்னே நிற்கலாம்-எம் கதிக்குப் பழுதுகண்டால் அடங்கா தவளைநாம் கண்டித்தோம் என்று ஒப் பிக்கலாம்-நல்ல துதிக்கென்ன காண் முட்ட நனைந்தார்க் கீரமில்லை எனக்கும் அப்படியே மெய்ப் பிக்கலாம்-சாமி அதுக்கல்ல என்றாலும் அரக்கர் மாயைகள் அறிந் தவள் எனவே கிட்ட வைக்கலாம் என்றோ(என்) ------ சூர்ப்பநகை கரனோடே முறையிடல் விருத்தம்-12 பன்னியசூர்ப் பநகையிந்தப் படிக்கே சொன்னாள் பாராமல் ஸ்ரீராமன் துரத்தி விட்டான் அந்நிலையே மூக்கறைச்சி மூளியாகி அரக்கிசென்றே அண்ணனுக்காப் பாடு பட்டேன் பின்னைஒன்றால் பட்டதில்லை உங்க ளோடே பெண்பிறந்து பட்டபிழை இதுதான் என்று மின்னிலைவேல் கரன்காலில் மரம்போல் சாய்ந்து விழுந்திட்டாள் அவன் கேட்க மொழிந்திட்டாளே தரு-6 கல்யாணி ராகம் ஆதிதாளம் பல்லவி பட்டபாடு கேளாய் - கரனேநான் பட்டபாடு கேளாய் (பட்ட) சரணங்கள் 1. பட்டபாடு கேளாய்-பணைத்தோளாய்-பிடித்தவாளாய் குட்டி மனிதன் என்னைக்-கட்டியிழுக்கப்பின்னை பெட்டிப் பாம்பு போலே-நட்டி அண்ணனாலே (பட்ட) |