பக்கம் எண் :

175

2. ஏதற்கும் பெண்ணைக்கண்டே-அண்ணனுக்குண்டே-என்று கொண்டே
  தூக்கப்போனேன் பெண்டு-காக்கும் மனிதன் கண்டு
  மூக்குங் காதும் ரெண்டும்-போக்கடித்துக்கொண்டு   (பட்ட)

3. திருத்தமா னசூரர்-இரண்டுவீரர்-நராவதாரர்
  அரக்கர் வேர்களைந்து-நறுக்கவே நினைத்து
  இருக்கிறாரே வந்து-ஒருத்திபெண் பிறந்து        (பட்ட)

4. பங்கம் இன்னம் வேணுமோ-காதுதோணுமோ-மூக்குநாணுமோ
  லங்கை ஆளும் வல்லி-தங்கையான் செல்லி
  மங்யைர்க்குள் நல்லி-உங்கள் பேரைச்சொல்லி    (பட்ட)

-----

கரதூஷணத் திரிசிரர்களின் வதை

     காதலிசூர்ப் பநகியிந்தப் படிக் கோடாலிக்
          காம்புகுலத் துக்குக்கே டென்றாற் போலப்
     பாதகனாம் கரன்முதலா னவர்க்குச் சொல்லிப்
          படைக்கடலை மூட்டிவிட்டப் பாலே நின்றாள்
     சாதகனாம் ராமச்சந்திரன் சாலை நீங்கிச்
          சண்டகோ தண்டத்தை வளைத்தம் பாலே
     ஓதம்எனும் அரக்கருயிர் முகுர்த்தம் தன்னில்
          ஓட்டினான் தருமம்நிலை நரட்டி னானே

தரு-7

பந்துவராளி ராகம்                         அடதாள சாப்பு

பல்லவி

     அடித்தானே ரகுராமன்-கோதண்டம்கை      
     பிடித்தானே செயராமன்                    (அடி)

அநுபல்லவி

     அடித்தானே ரகுராமன்      முடுக்கானகரநாமன்
     அனுப்பின பதினான்கு      முனைத்தலைவரை ஆங்கு
     அரக்கிக் கண்காட்டியே     பொருக்கென மூட்டியே
     அப்புரத்திலே ஒண்டக்      கைப்பிடித்தகோ தண்ட
     அய்யன் கைகளில் வாரி     எய்கின்ற சரமாரி
     அதினால் உரைக்கரும்      பதினால் அரக்கரும்
     அலைகடல் போல்எழத்     தலைதலை யாய்விழ
     ஆனைப்பட முடியச்        சேனைக்கடல் வடிய (அடி)