பக்கம் எண் :

176

சரணங்கள்

கரிகள் பலவும் சுற்றப்           பரிகள் அதிலும் மத்தக்
கட்டிய தேர்களும் ஒத்த         நட்டணை வீரரும் மெத்த
கருந்துக ளால் அளைந்து        பெருங்கடல் போல் வளைந்து
காகுத்தன் சாலையைப் பற்றி      மேகத்தைப் போலவே கத்தி
கங்குகங்காய் முனைதரப்         பொங்கி அங்கே வரவர
கதிகாணா வரப்                பதினாலாயிரக்
கனகத் தேரொடும் கூடி          கதிரவனைப்
பனிமொய்த்ததென மூடி          ராமனை மொய்த்துக்

1. கரனும் தூஷணன்திரி சிரனும்வர அரக்கி
     களிப்பாகக் காட்டினாளே-நமனும்பசி
     இளைப்பாற மூட்டினாளே-அத்தை ராகவன்

  கண்டானே தம்பியைக்-கொண்டானே ஒருமனு
     காத்திரு சனகிதன்னை-இந்தச் சண்டையைப்
     பார்த்திரு முனையும் என்னை-என்று நாணியை

  காதண்ட இழுத்துமுனைக்-கோதண்டம் வளைத்துமழைக்
     கற்கடகச்சந்தி ரன்போலே-சரமாரிகள்
     உக்கிரங் கொண்டு விடலாலே-வல்லரக்கர்கள்

  கரம் அறுந்தவர்களும்-சிரம் அறுந்தவர்களும்
     கண்டம் கண்டம் ஆனபேரும்-கட்டைகள்போலே
     துண்டம் துண்டம் ஆனபேரும்-இறுக்கிக்கட்டும்

  கவசங்கள் கிழிந்தோரும்-துவசங்கள் கிழிந்தோரும்
     கடைவாய் கிழிந்தோரும்-பிடித்து வந்த
     குடைபோய் அழிந்தோரும்-கணைதொடுக்கும்

  கைச்சிலை யானதும்அற்று வச்ச ஆயுதமும் அற்றுக்
     கையைக் கையைப் பிசைவாரும்-குற்றுயிராகிப்
     பையப் பைய அசைவாரும்-நெற்றிப் பிளந்து

  கத்தும் பரிகளும்தலை சுற்றும்பரிகளும் ரத்தம்
     கக்கும் பரிகள் அனேகம்-குடல் அறுந்து
     முக்கும் பரிகள் அனேகம்-மதயானைகள்