177 கைத்தலம் பிளந்துபெரு மத்தகம் பிளந்துவைத்த காத்திரங்களும் பிளந்து-நெருப்புப்போலும் நேத்திரங்களும் பிளந்து-மலைமலையாக் கதறுண்டு சிதறுண்டு மதகுஞ்சரம் உருண்டு காடுகளா விழுந்ததுகள்-கண்ணுக்கெட்டாத மேடுகளா எழுந்ததுகள்-இவையறிந்து கடித்தானே இரும் பல்லைப் பிடித்தானே ஒருவில்லை காய்ந்தானே திரிசிரசன் ராகவன்மேலே பாய்ந்தானே குணமுரசன்-பாய்ந்தவன்துர கதத்தையும் ஏறிவந்த ரதத்தையும் அய்யனவன் கைச்சிலையும் முறித்து விட்டான்-அவனுடைய முச்சிரமும் தறித்து விட்டான்-அவன்பிறகே காத்திருந் தெதிராலே-ஏற்றவர்களை மேலைக் காற்றில் பஞ்சுகள் போலே-தூற்றிவிட்டொருக்காலே (அடி) 2. வெற்றிராமன் தொடத்தொட-அஸ்திரங்கள் படப்பட வீட்டில் ஓடுவாரையும் காட்டில் ஓடுவாரையும் வில்லைவிட்டெறி வாரையும் கொல்லையிற் பரிவாரையும் விலக்கங் கொண்டவரையும் கலக்கங் கொண்டவரையும் விருத்தம் செய்தீர் என்றும் நரர்க்கஞ்சினீர் என்றும் விசை கொண்ட தூஷணன் வசைகொண்ட பாஷணன் விசயத்தேர் பூட்டினானே சக்கரம்போலே திசைஎட்டும் ஓட்டினானே ஓட்டிஎதிர்த்து விட்ட கணைகளும்-தொட்ட-தொட்டகணைகளும் வெடிபட நீக்கினானே-ராமன அம்பாலே பொடிபொடி ஆக்கினானே-பிறகே வந்த மேற்படைகளும் புரண்டு நாற்படைகளுந்திரண்டு வெகுவாகக் குதித்தாரே-எல்லாரும் ஒரு முகமாக மிதித்தாரே-மிதித்தவர்கள் வெட்டும் வெட்டும் என்பார்சிலர்-கட்டும் கட்டும் என்பார்சிலர் மெல்லும் என்பார் சிலபேர்-நரன் இவனைக் கொல்லும் என்பார் சிலபேர் அரக்கர்விட்ட |