பக்கம் எண் :

178

வேல்ஒடிந்து கால்ஒடிந்து-கோல்ஒடிந் துதிரப்பெரு
     வெள்ளத்தில்    மிதப்பாரும்-ஆனைவிழுந்த
     பள்ளத்தில்      பதைப்பாரும்-கதிகலங்கி

மெத்த உள்ளம் கெடநொந்து ரத்தவெள்ளந் தனில் வந்து
     விழுந்தார் அனேகம் அரக்கர்-ரத்தவெறியால்
     அழிந்தார் அனேகம் அரக்கர்-தூஷணன் கண்டு

விளைத்தானே செருவில்லை வளைத்தானே கணைசெல்ல
     விடுத்தானே மழைபோலே-ராகவன் அதைத்
     தடுத்தானே கணையாலே-அதின்பிறகு

விடுகணை பொடிபட ஒருகணை சடுதியில்
     மெய்தமுனையோடு    தொட்டானே சாமிக்குநெற்றி
     மத்தியிலேபட        விட்டானே-ரகுநாயகன்

மீறிஅவன் ஏறிவரு தேரதிலே சாரதியை
     வெட்டினானே கணைஎய்து-குதிரைகளைக்
     கொட்டினானே தலைகள்கொய்து-கொய்ததல்லாமல்

வில்லுந் துணிந்திட அவன் சொல்லும் துணிந்திடத் தேரை
     வேறுவேறு நொறுக்கினானே-அவன்கைகாலை
     கூறுகூறா நறுக்கினானே-நறுக்கினபின்

மின்னும் அவன் எதிராகப் பின்னும் ஒருகணைபோக
     விரல் ஒத்துத் தொடுத்தானே தூஷணனும்
     சிரம் அற்றுப் படுத்தானே-அதனைக்கண்டு

விண்ணுலகில் அனைவரும்-மண்ணுலகில் முனிவரும்
     வெருள் துன்பம் பிரிந்தாரே-வாழ்த்தொடு புஷ்ப
     வருஷங்கள் சொரிந்தாரே-அரக்கர்பட்ட

வெற்றிநல் லோர்தொடுக்க ரத்தவெள்ளாறெடுக்க
விசையமங் களம்பாடத் திசையெங்குங் கொண்டாட  (அடி)

3.   தத்திவரும் பரிகளும் சுற்றிவரும் கரிகளும்
     தாவிவரும் பெருந்தேரும் சேவகம் பேசியபேரும்
     தளகர்த்த வீரரும் வளம்மிக்க சூரரும்
     தண்டுடனே எதிர்வரும் மண்டியசேனாதிபரும்
     சாரிசாரி யாகவந்து போரிலே மிகமுனைந்து