பக்கம் எண் :

179

தம்பி தூஷணன் பட்ட புண்பாடது முட்ட
     தணல் போல நிவந்தானே-சாதிலிங்கம்போல்
     இணைக்கண்கள் செவந்தானே-செவந்தபின்பு

தாக்கிய புலியை ஒத்து மூக்கிலே விரலைவைத்துத்
     தாழ்ச்சி இதுவென நொந்தானே-நொந்து பொல்லாத
     ராட்சத கரனும் வந்தானே-வந்து சுற்றிலும்

சதுரங்கத் தளத்தோடே ரணரங்கம் அதைத்தேடி
     சாமிராகவனைக்  கண்டான்-மனிதன்இவன்
     ஆமென மனதிற் கொண்டான்-சேனைகள்விட்ட

சக்கரம் இருப்புலக்கை கப்பணம் முசுண்டி பண்டி
     சஸ்திரம்வே     லாயுதங்கள்-குறித்துவிடும்
     அஸ்திரம்சூ     லாயுதங்கள்-பொடிப்பொடியாத்

தறிபட்டும் முறிபட்டும் விலகச்சிலை வளைத்துச்
     சாய்த்தானே     சரதாரை-ரகுநாயகன்
     தேய்த்தானே    வெகுபேரை-வரும் அரக்கர்

தலையைச் சிலையை ரத்தின முடியைக் கொடியைவெட்டிச்
     சரித்தானே      சிலகணையால்-அடிவயிற்றை
     எரித்தானே     சிலகணையால்-இரைக்குவந்த

சாகினியும் டாகினியும் காளிகளும் கூளிகளும்
     சதுர்கூடிப் பார்த்தாடுமே-கவந்தமதுக்
     கெதிராகக் கூத்தாடுமே-படைகளெல்லாம்

சரியானது கண்டு கரனானவன் முண்டு
     சாகசங்கள்      செய்தானே-ஒருநொடியில்
     ஆயிரம்அம்     பெய்தானே-எய்ததுகண்டு

சற்றுநேரத்தில் அய்யன் அத்தனைக் கத்தனைவிட்டு
     தவிடாக        ஊதினானே-பின்னையும்சில
     அவன்மேலே    மோதினானே-அரக்கன் அங்கே

சாதித்த கணையாலே ஆதித்த குலநாதன்
     தனுவையும்    ஒடித்தானே-தவமுனிவர்
     மனதையும்    மடித்தானே-ராமனுக்குத்