180 தடத்தில் பரசுரான் இடத்திற் பறித்த வில்லைத் ததியினில் எடுத்தானே-வருணன் அங்கே உதவியாக் கொடுத்தானே-கொடுக்கஒரு சரத்தாலே ரகுவீரன் வரத்தாரை பயமெல்லாம் தணுத்தானே உளந்தனிலே துணித்தானே களந்தனிலே-இப்படி அந்த சனஸ்தான வருக்கத்தில் முனைந்தாரை முகுர்த்தத்தில் தான் ஒருவனுமாக வானவர் துயர்போக (அடித்தானே) ------ சூர்ப்பநகை ராவணனோடே முறையிடல் விருத்தம்-14 முடிவரிய கரன்படையை முடித்த ராமன் முன்போலச் சாலையில்போய் இருந்தான் இப்பால் இடிகுரற் சூர்ப்பநகை சென்றாள் இலங்கை தன்னில் ஈயெறும்பும் அழுதிடரா வணன்முன் வீழ்ந்தாள் அடிவரலா றுகள் என்ன உன்னை இந்த அவமானம் செய்ததென்ன அவர்ஆர் என்ன கெடியரக்கன் குலமுழுதும் வேரை வாங்கிக் கெடுக்கின்றாள் அரக்கிசொல்லத் தொடுக்கின் றாளே திபதை-6 தோடிராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. கண்டேன் கண்டேன் அடா அண்ணேன் காட்டுகிறேன் பஞ்ச வடியிலே-யார்க்கும் அண்டாநரர் இருக்கின்றார் அவர்க் கவரேநிகர் இந்தப் படியிலே 2. தரும சீலராம் அயோத்தி தசரத மகாராசன் பாலராம்-அவர் விருது கட்டி அரக்கர்தங்களை வேர் அறுக்கவந்த காலராம் 3. நீதம் தெரிந்தவராம் அவர்கைக்கு நேத்தியா இருவரிவில் அமைந்ததாம்-அதில் |