181 கோதண்டம் அரக்கர் சீவனைக் குடிக்கவேண்டுமென்று சமைந்ததாம் 4. ராம லட்சுமணர் வடிவெலாம்என் னாலேசொல்லிமுடி போகுமோ-அந்த காமராசன் வடிவும் அவர் காலின் தூளுக்கிணை ஆகுமோ 5. கிட்டிப் போய் என்சுகக் கேளியிலே மையல் கொண்டேனே-அங்கே திருஷ்டிப் பிரியமான பெண்கள் சிகாமணி ஒருத்தியைக் கண்டேனே 6. சுந்தரமும் அவள் சிகப்பும் தொட்டுக் கொள்ளலாம் அண்ணாவே-நான் இந்தவயதினிலே என்கண்ணால் எங்கும் கண்டதில்லை அண்ணாவே 7. மன்னா உன்னால் நான் அவளை வாய்க்கடங்காப் பிடியாப் பிடித்தேனே-ஒரு சின்னமனிதன் கையால் என்றன் செவியும் மூக்கும் போக் கடித்தேனே 8. அந்தோ என்னாலே பதினால் ஆயிரம் தேர்க்காரரும் மூண்டாரே-எதிர் வந்தார் கரன்முதலானோர் அந்த மனிதனால் கால் மாண்டாரே 9. செப்புச் சிலையுமல்ல அந்தப்பெண் செம்பொற்சிலை வார்த்தாற் போல் இருக்குதே-நான் ஓப்பெங்கும் காணேன் அவளே உனக்காம் என்மனம் உருக்குதே 10. தாவிப்பிடித் தேனே எனக்கு மெள்ளத் தப்பி விட்டாள் வந் தெடுப்பாயே-அந்த தேவி இங்கே வந்தால் உன்னிட சீவனை யாகிலும் கொடுப்பாயே |