182 சூர்ப்பநகை ராவணன் முன் சீதையை வர்ணித்தல் விருத்தம்-15 கன்னம் அறுந்தது னக்கென்றும் கரனும் போனானென்று மிங்கே பன்னலாமோ விடுவிடு நீபார்த்தேனென்ற பெண்ணவளைச் சொன்ன வுடனே உயிர்கிடந்து துடிக்குதடியே சூர்ப்பநகி இன்னம் ஒருகால் சொல்என்றான் எடுத்தாள் சொல்லத் தொடுத்தாளே தரு-8 சுருட்டி ராகம் அடதாளச்சாப்பு பல்லவி காணவேணும் லட்சம் கண்கள்-சீதாதேவிதன் காலுக்கு நிகரோ பெண்கள் (காண) அநுபல்லவி சேணுலகெங்கும் வாட்டித்திசை யெங்கும் கீர்த்தியை நாட்டித் திரியும் ராவணா உன்றன் இருபது கண்போதுமோ (காண) சரணங்கள் 1. குவளை விழிகளோ பாணம் அவள்தன்வார்த்தை கொண்டால் அதுவே கல்யாணம் நவரத்தினத் தங்கத்தோடு நடையிலே அன்னப்பேடு அவனிமேல் இல்லை ஈடு அவளுக்குஅவளே சோடு (காண) 2. தங்கக் கொடிபோல் இடையும் சீவிவகிர்ந்த சாய்ந்த பின்னலின் சடையும் இங்கிது மிருது வாக்கியம் இவளே தேவதா யோக்கியம் மங்கையர்க்குள்ளே சிலாக்கியம் வாய்சால் உன்னதே பாக்கியம்(காண) 3. தவமுனி ஒருத்தன் பெண்டு அவனுக்கேற்ற தம்பி ஒருத்தன் அங்குண்டு அவளே நல்ல ஐஸ்வரியம் அவளே நல்ல காம்பீரியம் அவள்வந்தால் அல்லோவீரியம் அய்யோ முடியும்உன் காரியம் (காண) |