183 மாரீசன் ராவணனை இடித்தல் விருத்தம்-16 கடுத்த தங்கை இதுசொல்லச் சீதைமேலே கருத்தாடக் காமப்பேய் தலைசுற்றாட உடுப்பதுவும் உண்பதுவும் மறந்தான் சிந்தை உரைமெழு கானான் அரக்கன் அம்மானேநீ அடுத்தெனக்கு ராமன்மனை வியைத்தா என்றான் அது கேட்டவுடனே நாராசம் காய்ச்சி நடுச்செவியில் வைத்தாற்போ லேமாரீசன் நடுக்கின்றான் ராவணனைத் தடுக்கின்றானே தரு-9 துசாவந்தி ராகம் ஆதிதாளம் பல்லவி என்ன புத்தி நினைத்தாயாடா அடாராவணா என்ன புத்தி நினைத்தாயடா (என்) அநுபல்லவி பின்னொருத்தி அல்லராமன் மன்னவன் தேவியைச் சொல்ல அன்னவன் அம்பிங்கேசெல்ல உன் இனத்தையெல்லாம் கொல்ல(எ) சரணங்கள் 1. கள்ளிப் பொறிவர லாலே-மூங்கில் எரிந்து வெள்ளிச் சாம்பலானாற் போலே கொள்ளியாய் வந்தாள்உன் தங்கை அள்ளிராமனை இங்கே தள்ளிவிடும் முன்னேதலை துள்ளிவிடுமேநமக்கு (என்) 2. இந்தமதி பண்ணல் ஆமோ-மூங்கில் எரிந்து சிந்தையிலும் எண்ணல் ஆமோ முந்தொருத்தி ஆசையிட்டான் சந்திரனும்பழிபட்டான் வந்தகலிகையைத் தொட்டான் இந்திரனும் மகிமை கெட்டான்(என்) 3. உத்தம சீதையை உன்னாதே-உன்னினால் அவன் சற்றிலே விடுவான் என்னாதே புத்திரர் தலையும் சேர்ந்த மித்திரர் தலையும் ராம பத்திரர் அம்புகொய்யும் கொய்யும் சித்திரவதை செய்யும் செய்யும்(என்) |