பக்கம் எண் :

184

4. துப்புள்ள விராதன் இறந்தான்-ராமன் அம்பாலே
  அப்படிகரனும் பறந்தான்
  இப்படி வாராதே நாடித் தப்புவதல்லவோ மோடி
  செப்பினேன் உன்னது தேடிக் கைப்பொருட்கும் ஏன் கண்ணாடி(என்)

5. வேலையில்லாவேலை     எண்ணினாய்-சின்னஞ்சிறிய
  பாலகர் யோசனை        பண்ணினாய்
  கோலமான சீதையென்று காலமாய் அடங்கி நின்று
  காலன் வந்ததைத் தேராமல் மூலகாரணம் பாராமல் (என்)

6. வேதனையும் சூதும்வாதும் சொன்னாய்-இந்தப்
  பேதைமதி போதும்       போதும்
  சீதைஎண்ணம் எண்ணத்தானே வாதையுண்டாம் சீமானே
  மாதுலன் உனக்கு நானே ஏதுஅறிந்து சொன்னேனே    (என்)

7. பைந்தொடி சீதைபேர்         சொல்லாதே-சொல்லாதே அது
  எந்தவிதத்திலும்              பொல்லாதே
  வந்திடுமேராம           பாணம் என்தன் உரையே பிரமாணம்
  என்தலைக்கும் பாயும் பொய்யோ உன்தலைக்கும் பாயும் ஐயோ(என்)

8. முன்னம் விஸ்வாமித்திர   னாலே-யாகசாலை
  தன்னுள் வந்து நமன்     போலே
 அன்னையும் கொன்றான் சுவாகு தன்னையும் கொன்றான் அவனை
 உன்ன அதிர் எடுக்குதே இன்னம் நடுக்குதே   (என்)

------

லட்சுமணர் பொன்மானைப் பொய்மான் என்றல்

விருத்தம்-17

    இசையமா ரீசன்இந்த வார்த்தை சொன்னான்
          ராவணனும் சீறினான் பொன்மா னாய்ப்போய்
    அசையாமல் சீதைவிழிக் கெதிரே நின்றான்
         அவளும் ராமனைப் பிடித்துத் தருவாய் என்றாள்
    பசையினால் லட்சுமணன் பொய்மான் என்றான்
         பாராமல் நான் இதனைப் பிடிப்பேன் என்று
    விசையரா கவன் நடந்தான் வாயை வாயை
         மெல்லுவான் தம்பிபின்னும் சொல்லு வானே