185 திபதை-7 தன்னியாசி ராகம் அடதாள சாப்பு கண்ணிகள் 1. வர்ணமானுமல்ல சொர்ணமானும் அல்ல மர்மமான் என் சாமி பின்னைத் தெரியும் இதுநம்மை மருட்டவந்த பெரிய கால நேமி 2. பார்த்தமான் ஈதல்ல இந்தமான மடிப்பு பண்ணவந்த மானே கூத்துப் பார்க்கப் போனஇடத்தில் பேய் பிடித்தாற்போல் குலையுதென்மனம் தானே 3. ஊழியம் செய்கிறான் இந்தமான் சந்தேகமான் என் றுள்ளது சொன்னேன் அய்யனே ஏழைசொல் அம்பலம் ஏறுமோ கட்டளை இட்டபடியே செய்வனே 4. மானோ மாயமிது தானோ அம்மைகைக்கு வந்தால் சொர்ண மழையோ ஏனோ பிடித்துத்தா என்று சொல்லுகிறாளே என்ன காலப் பிழையோ 5. அந்த அன்னை சொல்லால் ஐயன் தசரதனும் அலங்கோலம் ஆனானே இந்த அன்னை சொல்லால் என்னமோ அண்ணனுக்கு ஈதென்று தெரியனே 6. அப்போது வேள்வியில் வந்த மாரீசன் என்றே அயிர்க்கிறேன் நீ ஆராய் தப்பிதம் சொல்லறியேன் அப்புறம் சித்தத்துக்கு சரிப் போனபடி பாராய் |