பக்கம் எண் :

187

3. பண்ணின மாயையாலே அந்தமாரீசன் - மாளும்
     பருவத்தில் அங்கே ஓலம் இட்டானே நீசன்
  எண்ணாத்துன்பம் ஏதுக்கிருக்கிறேன் -தாசன்-அவனை
  எண்ணினால் ஒருமேக வண்ணனுடனே நெற்றிக்
  கண்ணனுடனே கூட்டி அண்ணனையும் எண்ணாமல்-(ஆர்)

சீதைக்கும் ராவண சந்நியாசிக்கும் சம்வாதம்

விருத்தம்-19

மெள்ளவே இளையோன் இந்த விதம்சொல்லி நடந்தான் பின்னே
கள்ளமாம் தவசியாகிக் கடுகிரா வணன்தான் வந்தான்
வள்ளலே வாரும் என்றாள் வஞ்சனை அறியாள் சீதை
உள்ளமா முனிவர் என்றே உரைக்குரை சொல்லு வாளே

திபதை-8

ஆரபி ராகம்                             ஆதிதாளம்

கண்ணிகள்

1. வாரும் என்றவுடனே ராவண சந்நியாசி         
     வந்து கண்டானே அந்த                   நாளே
  ஆரோநீர் என்று வஞ்சகன் கேட்கவே
     அன்னை எதிரே சொல்லு                  வாளே

2. தசரதன் பாலான் தம்பியுடனே பெற்ற
     தாய் சொல்ல வந்தான் இந்த               பூமி
  இசையும் சானகி என்பேர் காகுத்தன் மனைவிநான்
     இங்கே இருக்கிறான் என்                  சாமி

3. இந்த வனத்தில் மெத்த பழுத்த பழம் போலவே
     எங்கே வந்தீர் தேவ                      ராயே
  வந்தது சொல்லுகிறேன் சந்தோஷம் ஆசுச்சற்றே
     மனது வைத்துக் கேளாய்                   நீயே

4. போரில் பெரியவன் ஆயிரம்வேதம் வந்தோன்
     பிரம தேவனுக்குக்கொட்                   பேரன்
 ஆராலும் அசையாதகைலாசமலை தன்னை
     அசைத்துப் பிடுங்கின கெம்                பீரன்