பக்கம் எண் :

188

5. அமைந்த தேவரையும் அஷ்டதிக்குப் பாலரையும்
     ஆக்கினையால் அந்தமகா                  ராசன்
  சுமந்தகலையும் சும்மாடு மாத்திரிய
     துரைத்தனம் செய்யும் இலங்                கேசன்

6. நலங்களினாலே இந்த இலங்கைக்குச் சொர்க்கம்ஒரு
     நரகம் போலக் காணும்                    மாதே
  இலங்கையை விடலாமோ என்ன காலமோ நான்
     இங்கே வந்தேனே இப்                    போதே

7. சினமித்த முனைவாளும் மிகுந்த நாளும் அந்தச்
     சிவன்கையில் வாங்கினவன்                 தானே
  மனதுக்கினிய பெண்கள் மாணிக்கம் ஒன்றுதேடி
     வருந்து கிறேன் திவ்ய                     மானே

8. வீராதி வீரன்அஷ்ட திக்கெச தந்தங்களை
     வெடுக் கென்று ஒடித்த வச்சிர               ஆகன்
  ஓரான் காணியா மூன்றுலோக முங்காக்கும்
     ஒருத்தன் அரக்கன் கன                    யோகன்

9. மூன்று லோகமும் காக்கும் அரக்கன் என்றீர் அவன்
     மூவேழுலங்களும்                         நாளை
  கீண்டெறிய வந்தானே ரகுவீரன் என்று சொல்லக்
     கேளீரோ எங்கள்பெரு                    மாளை

10. பெருமாள் பெருமாள் என்ற மனிதன்வந் தரக்கரைப்
     பிடுங்கி எறிவான் என்றாய்                 பெண்ணே
  ஒருமுசல் குட்டிவந்து சிங்கந்தன்னை அடித்த
     உவமை போல் ஆச்சுது காணும்             கண்ணே

11. உவமை என்றீர் காணும் பதினாலாயிரவரும்
     உருண்டாரே மனிதனால்                   அய்ய
  இவர் இராவணன் போல் இருபது தோளர் அல்லாமையால்
     இறந்தார் மனிதன் கொலை                 செய்ய

12. ஆயிரந்தோள் இருந்தும் கார்த்த வீரியன் தன்னை
     அடித்தான் மனிதன் அல்லோ                   முன்னே
  தாயிது சொன்னவுடன் சந்யாசி வேஷம்விட்டுச்
     சண்டாளன் எழுந்தானே                        பின்னே