பக்கம் எண் :

189

13. தீமுகனாய் ஆரக்கன் ஆகாத வார்த்தைசொல்லி
     செவியில் கை வைத்தே அந்த                   தேவி
  ஓமபிண்டத்தமுதை நாய் இச்சைபட்டது போல்         போல்
     உரைத்தாய் என்னடா அடா                பாவி

14. நின்ற நிலைக்கே தப்பி ஓடி அப்புறம் போடா
     ரெகுவீரன் பிழைக்க வொட்                டானே
  என்றவுடன் சீதையை நிலத்தோடே தூக்கி வஞ்சன்
     எடுத்துத் தேரினில் இட்                   டானே

------

சடாயு ராவணனுக்கு புத்தி சொல்லுதல்

விருத்தம்-20

தேரினில்இப் படிசீதை தனைக்கெண்டு போம்அளவில் சீறி வந்து
போரினில் ராவணா பத்துமுடி யும்தெறிக்கப் புடைப்பேன்கண்டாய்
பேரியல்சீ தையைவிட்டால் பிழைப்பாய்இல் லாவிட்டால் பிழையாய்என்று
வீரியமாய்ச் சடாயுவந்து கிளம்பினான் புத்திசில விளம்பி னானே

தரு-11

அசாவேரி ராகம்                              ஆதிதாளம்

பல்லவி

விடுவிடடா சீதையை விடுவிடடா-ராவணா
    விடுவிடடா சும்மா விடுவிடடா                   (விடு) 

அநுபல்லவி 

சுடுநெருப்பிவளாலே அடியோடே வேகாதே
        சுருபத்தைத் தெரியாமல் நகரத்தில் மூழ்காதே
   அடடாசொன்னேன் சொன்னேன் நடுவிலே சாகாதே
        ஆசையினாலே குல நாசமாய்ப் போகாதே     (விடு) 

சரணங்கள் 

1. என்செய்தாய் இவள் நஞ்சம் என்றெண்ணாமல்
          ஏழைஎளி மையாய்க்             குறியாதே
      என்தாய் இவள்மனம் நொந்தாள் இருப்பாயோ
           என்தன் வார்த்தை கேள்         முறியாதே