190 கொஞ்ச அரக்கர் மான் குட்டிஎன்றும் ராமன் குட்டிச் சிங்கம் என்றும் அறியாதே குதிக்கிறாய் உங்களை வதைக்க வந்தானே அவன் கொல்லவரும் யானை முன்னே கல்லுகள்விட் டெறியாதே(விடு) 2. கர்த்தர் மூவருக்கும் கர்த்தன் ஆகுமிந்தக் காகுத்தன் என்று கொண் டாடுவேன் கையாலேநீ எய்வதெல்லாம் சிறைக் காற்றிற் பஞ்சு பஞ்சாய்ச் சாடுவேன் பத்தினி தனையிங்கே வைத்துப் போடா அவன் பக்கத்தில் தானே கொண் டோடுவேன் பாரடா இல்லா விட்டால் கூரான நகத்தால்உன் பத்துத்தலைகளும் கிள்ளிப் பத்துத்திக்கிலும் போடுவேன் (விடு) 3. கைக்குள்ளே அடக்கி இக்கணமே நான்ஒரு மிக்க உறிஞ்சு வேன்உன் தலைமூளை கருங்காக்கை களுக்கும் நமனுக்கும் உன்னைநல்ல விருந்தாக் குவேன் பாரடா இவ்வேளை முக்கணன் வரம்பெற்றும் அக்ரமம் செய்தாவது தக்குமோ கேடல்ல வோநாளை முனைகெட்டுப் போவாய்சீதை தனைவிட்டுப் போடாதேவர் முன்கொடுத்த வரமெல்லாம் ஏன் கெடுக்கின்றாள் முட்டாளே(விடு) ------ சடாயுவுக்கும் ராவணனுக்கும் உயுத்தம் விருத்தம்-21 பொறுத்தான் இந்தப் புத்திசொல்ல பொல்லா அரக்கன் கொள்ளாமல் வெறுத்தான் அதற்கப் புறந்தேரை விடும்போதினிலே நெடுந்தூரம் குறித்தே போனகுமாரர் வந்து வடுமளவும் இவனை இங்கே மறிப்பேன் என்று சடாயுவும் வாய்மடித்தான் சண்டைபிடித்தானே தரு-12 மத்தியமாவதிராகம் அடதாளசாப்பு பல்லவி கொத்திக் கொத்தி அடித்தானே - இடித்தானே - சடாயுராசன் கொத்திக் கொத்தி அடித்தானே |