191 அநுபல்லவி பத்துச் சிரத்திலும் தாளிலும் தோளிலும் பற்றிக் கரத்திலும் மாரிலும் தேரிலும் தத்தித் தத்திப்பறந் தெத்தி எத்திக் கையால் குத்திக் குத்தி எங்கும் சுற்றிச் சுற்றி மூக்கால் (கொத்) சரணங்கள் 1. ஆலகாலம் போலே சீறி எதிர்தேறி உடம்பெங்கும் கீறிப்பறித்து கோலாகலத்தேரை மறித்து அச்சைமுறித்துப் பத்துமுடியும் காலாலும் கையாலும் மேலே கிள்ளிக்கிள்ளி கண்டகண் நாலைந்து குண்டலமும் தள்ளி மேல்வரும் அம்பெல்லாம் வாலால் விழத்தட்டி வீணைக் கொடியையும் தூணியையும் வெட்டி (கொத்) 2.ஈரேழுகணையவன் தொடுத்துவிடத் தடுத்துக் கவசத்தையும் கெடுத்து நேராக நூறம்பைப் பூட்டிவிட மாட்டிச்சிறகால் விழக்காட்டி போராடக் கொண்டொரு சூலம் அவன்போட புதையாமலே அது சிதறி அப்பால்ஓட கூரானமூக்காலே பாகனை மடித்து கொல்லுவேன் என்றவன் வில்லையும் ஒடித்து (கொத்) 3. மோதும் அவன் தெண்டால் சாய்ந்து களைதீர்ந்து குதிரைகளைப்பாய்ந்து பாதகனை வீழத்தாக்கி களையாக்கி மணிரதத்தைப் போக்கி சூதிவன் செய்கிறான் என்றறியப்பட்டு தோழன் மருமகள் என்கிறதைத் தொட்டு காதகராவணன் மோதி அறவெட்டும் கத்தியினால் சிறகு அற்றுவிழும் மட்டும் (கொத்) சடாயு விழவே சீதை புலம்பல் விருத்தம்-22 அடித்தநம் சடாயு ராசன் அவனிமேல் வீழ்ந்தான் சீதை கொடிக்கொரு கொழுகொம் பில்லாக் கொள்கைபோல் ஆனாள் இந்த முடித்தலை பத்துள்ளானை முடிப்பதார் எனவே அச்சம் பிடித்தனள் வடித்த கண்ணீர் பெருகினாள் உருகினாளே |