192 தரு-13 ஆனந்தபைரவிராகம் ஆதிதாளம் பல்லவி என்ன செய்வேன் சீதை நானிமேல் என்ன செய்வேன் தெய்வமே (என்) அநுபல்லவி என்செய்வேன் மான்பின் போன இருவீரரும் வாரீரோ வஞ்சக ராவணன்செய் வகைமோசம் பாரீரோ (என்) சரணங்கள் 1. எய்தும் வீட்டினில் இருவென்று சாமிசொல்ல இருந்தேன் இல்லைநானே மைய லாஎன்னைப் பிரித்திடச் சனிபோல வந்ததே பாழ்மானே கையினால் பிடியும் என்றதல்லாமல் நான் கண்டேனோ பலன்தானே அய்யய்யோ உண்ணாமல் திண்ணாமல் ஊர் அம்பலம் ஆனேனே (என்) 2. ஈன ராவணன் கெலிக்கச் சடாயு மன்னன் இறந்தது என்ன தொல்லையே ஆனபோதிவன் குடிக்கென்ன காலமோ அறிவேனோ சாமி இல்லையே (என்) 3. பூட்டும் வில் இளை யோனைஇடும்பு சொல்லிப் போப் போ என்றேனே தாட்டிக ராவண சந்நியாசிசெய்த சதிக் குள்ளாய் நின்றேனே வீட்டிலே புகுந் தேன்அந்தமாமனை விதிபோலே தின்றேனே |