பக்கம் எண் :

193

காட்டிலே புகுந்தேன் இந்த மாமனைக்
     கண்முன்னே         கொன்றேனே    (என்)

------    

ஸ்ரீராமர் சீதைக்காகத் தம்பியோடிரங்கல்

விருத்தம்-23

    இஷ்டமுள்ள சடாயு வுக்கிவ் வாறு சொல்லி
          இரங்கஅவ ளுடன் அரக்கன் இலங்கை சேர்ந்தான்
    மொட்ட விழும் அசோகவனச் சிறையில் வைத்தான்
          முன்போன தம்பிதனை அண்ணன் கண்டான்
    பட்டபருவங் களெல்லாம் அறிந்தான் வத்து
          பன்னகசா லையையும் சீதையையுங் காணான்
    வட்டமலர் முகம்வாடித் தேடித் தேடி
          மயங்கினான் ஸ்ரீராமன் கலங்கினானே

திபதை-9

ஆகிரி ராகம்                             ஆதிதாளம்

கண்ணிகள்

1. உற்றசீதையைப் பிரிந்தேன் உனதுபுத்தியை எறிந்தேன்
  தத்துக்கள் எல்லாம் அறிந்தேன்      தம்பீ லக்ஷ்மணா

2. கட்டிவைத்த புதையலைக் கல்லி எடுத்தவன் போலத்
  தட்டிக் கொண்டு போனான் ஐயோ    தம்பீ லக்ஷ்மணா

3. நன்மைசெய்ய வந்தோமிது கன்மமாய் விளைந்தபோது
  தர்மம் என்ன தானம் என்ன         தம்பீ லக்ஷ்மணா

4. தேரோடே பாரோடேதூக்கி தீண்டாமல் தெற்குவழியே
  ஆரோ கொண்டு போறானித்தை அறிவாய் லக்ஷ்மணா

5. நலம் உள்ளோர் கவலைதீர்க்க நாம் இந்தக் கவலை ஏற்கத்
  தலைஎழுத்து வந்ததல்லோ  தம்பீ லக்ஷ்மணா

6. உண்டானால் இப்போதேநேரே ஓட்டமா ஓடினால்தேரை
  கண்டாலும் காணலாம் வாஎன்  கண்ணே லக்ஷ்மணா

------