பக்கம் எண் :

195

3. என்னுயிரைப்போக்       கடிப்பேன்-முனிவர்க்குநான்
     இசைந்ததெப்படி      முடிப்பேன்-அண்டங்களெல்லாம்
  சின்ன பின்னமாக        இடிப்பேன்-இது பார்த்திருந்த
     தேவரையும் ஆவி    குடிப்பேன்-என்தனுடனே
 முன்நாள்நீ சொன்ன வீரம் முடித்தாய் அல்லோ இந்நேரம்
 என்னால் உண்டோ உபகாரம் ஏதுக்கெடுத்தேன்சரீரம் (இந்த)

-----

ஸ்ரீராமர் கோபத்தைச் சடாயு ஆற்றுதல்

விருத்தம்-25

    மதிமுக ராகவன் இரங்கத் தம்பி வந்த
          வரலாறெல்லாம் சொல்ல மண்ணும் விண்ணும்
    கொதிஎடுக்கச் சீதைதன்னை எடுத்தான் உன்னைக்
          கொலை செய்தான் அரக்கனவன் குலத்துவாசி
    அதுகிடக்க உன்கொலை பார்த்திருந்த தேவர்
          அனைவரையும் மடிப்பேன் என்று ராமன் சீற
    இதுஉனக்கு முறைமையல்ல மகனே என்ன
          ஏற்றுவான் சடாயுமன்னன் ஆற்றுவானே.

தரு-15

துசாவந்திராகம்                                ஆதிதாளம்

பல்லவி

     ராமாநீ இந்தக் கோபம் செய்யல் ஆமா
     இருந்தல்லோ படுக்கவேணும் ராமா          (ராமா)

அநுபல்லவி

பூமியுடன் சீதையை ராவணன் கொண்டு மிண்டாய்
     போகையில் சண்டைபோடப் போச்சுதென் சிறைரண்டாய்
அவனைக் கொல்லாமல் நாம்விடு வோமோ கண்டாய்
     அதுக்குமுன் கிலேசத்தாலே பதட்டமாக ஒருக்காலே  (ராமா)

சரணங்கள்

1. இன்பம் வருவதும் துன்பம் வருவதும்
     எடுத்த உடற்கு நில        வரந்தானே
  சம்புவான சிவன்தானும் தலை ஓட்டைத்
     தன்கையில் ஏந்திக்கொண்   டிரந்தானே
  அம்புவி படைத்த பிரம்ம தேவனும்
     அறுப்புண்டானே ஒரு      சிரந்தானே