பக்கம் எண் :

196

நம்பும் சந்திரனும் சூரியனும் பாம்பாலே
     நடுங்கிறார் இன்னம் நிரந் தரந்தானே

உன்பிழையும் இந்தவகை ஒத்ததல்லோ ஆகையாலே
அம்பினால் ராவணன்தலை அறுப்பாய் பனங்குலை போல
தம்பிள்ளை பெண்டுகளோடே தாழ்ந்து நின்றொருகாலே
வெம்பதராம் அரக்கர்க்கு வேலைசெய்யும் தேவர்மேலே.   (ராமா)

2. சேனைஇந்திரனுக்கும் தேவர்க்கும் உயிர்நிலை
     செய்தது உனது தந்தை உபகாரம்
  ஆனை கெட்டவன் குடத்தில் தேடினாற் போல்
     அவரை வெறுத்தால் உண் டோசாரம்
  ஈனராவணன் சீதையைக் கொண்டுபோய்
     எவ்விடத் தில்வைத்தானோ இந்நேரம்
  போனதிசை தேடி அவனை வேர்அறுத்து
     புண்ணியத்தை நாட்டுவ துன்பாரம்

மானினைத் தொடர்ந்துபின்னே போனதென்ன அலங்கோலம்
போனதனால் வந்ததிந்த சானகிபிரிந்த   சீலம்
சானகி பிரிவரக்கர் ஆனவர்க்கு நாச    காலம்
ஆனதனால் தேவருக்கு நீநினைப்பாய்அனு கூலம்   (ராமா)

3. வெள்ளிவெண்பதி வளர்வதும் தேய்வதும்
     விதியின் பயன் அல்லவோ       ஆமோ
  உள்ளதொரு வர்க்கு நிறைவதும் குறைவதும்
     ஊழின்படி என்பதறி             யோமோ
  தெள்ளித் தெளிந்தஎன் கண்ணே உனக்கினி
     தெரியச் சொல்லுவார் எவர் தாமோ
  கிள்ளி எறிகுவாய் ராட்சதச் செடிகளை
     கேதங்கொண் டிப்படியுன்மனம் நோமோ

துள்ளிசமுத்திரம் பொங்கினால் கொள்ளுமோகிணற நேகம்
வள்ளலே உன்முன்னே லங்கை கள்ளர்கட் கெங்கே நிர்வாகம்
எள்ளளவு நீமுனிந்தால் அள்ளுப் பொடியாமே லோகம்
மெள்ள இருந்து பகையைத் தள்ளுவதால்லோ விவேகம்   (ராமா)