பக்கம் எண் :

198

கவந்தன் வதையும் துதியும்

விருத்தம்-27

    சானகியை இவ்வண்ணம் நினைந்து ராமன்
           ததும்பையிலே தம்பியுந் தண்ணீர்க்குப போனான்
    போனவிடத் தசோமுகிமூக் கரிந்துமீண்டான்
           புனிதர் இருவரும் கவந்தன் கைக்குள் ஆனார்
    ஆனபிற கவன்உயிரை முடித்தார் அந்த
          அரக்கனும் அந்தரத்தினிலே தேவனாகி
    தீனமில்லாப் பரமபதம் தனிலே ஏறச்
          செல்லுவான் சாமிதுதி சொல்லுவானே

திபதை-11

முகாரி ராகம்                             அடதாளசாப்பு

கண்ணிகள்

1. ஆதியும் ஆகி அநாதியுமாய் இந்த
     அகிலம் எங்கும் நிறைந்              தாயே
  பேதகம் இல்லாமல் ஆலந்தளிர் உள்ளே
     பிள்ளை யாகி உறைந்           தாயே

2. உன்தன் பதத்தைவேண்டித் தவஞ்செய்வார்கள் இந்த
     உலகத்திலே உள்ள ஞாயம்
  எந்தப் பதத்தைவேண்டி நீதவம் செய்ய வந்தாய்
     ஈதென்ன கண்கட்கு             மாயம்

3. முலையானதும் இல்லை கெர்பக் குறியுமில்லை
     முளைத்தா யேஒரு              தூணில்
  மலைவாய் உலகத்தோர் இறந்தான் பிறந்தான் என்பார்
     வாய்க்குண்டோ என்வார்த்தை         வீணில்

4. என்னை அறியாத அரக்கன் என்றாயேநீ
     இரண்டு செய்த பிறி             வேனோ
  உன்னை நீதானும் அறியாயே சாமிநான்
     உன்னை எப்படி அறி           வேனோ

5. காட்டுவானும் நீயே காணுவானும் நீயே
     கற்றாயே இந்திர                சாலம்