பக்கம் எண் :

199

போட்டுவிட்டுத் தேடித்தவிப்பார் போல் தவிக்கிறாய்
     போதும் போதும் இந்தக்         கோலம்

6. சூரிய காந்தத்தரும் தீபத்தைக் கொண்டந்த
     சூரியனைப் பணிவது            போலே
  ஆரியனே உன்தன் அனுக்கிரகம் கொண்டுநான்
     அறிந்ததைச் சொல்வேன் என்    னாலே

7. எனது சாபந்தீர்த்தாய் அதுபோலச் சவரிஇங்
     கிருக்கிற வளைக்காண           வேணும்
  தனதவள் சொல்லுவாள் சும்மாஇருந்தால் ஒன்றும்
     சாதிக்கல் ஆமோ சொல்லாய்     காணும்

8. திடமாய் அவள் சொன்னபடியே சுக்கிரீவனைச்
     சேரும் அவனுடனே             செல்லு
  கடல்போல் வானரங்கள் வருமே சனகியைக்
     கணத்தில் கொண்டவரச்          சொல்லு

9. தடுக்காமல் கேளாய் ஓர்சிற்றாள் எட்டாளுக்குச்
     சரியல்லோ அறியாயோ          நீயே
  திடுக்கென்று செய்யல் ஆமோ பதராதே காரியம்
     சிதறாதென் வார்த்தை ஆ        ராயோ

ஸ்ரீராமர் சவரிக்கு முத்தியருளி அப்பால் ஏகல்

விருத்தம்-28

பத்தியாய்க் கவந்தன் இந்தப் படிசொல்லிக் கதியிற் போனான்
சத்திய ராமன் பின்னே சவரிஆசிரமத்தில் போனான்
அத்திசை அமுது கொண்டான் அவள் உபசாரம் கொண்டான்
முத்தியும் கொடுத்தான் சொன்ன மொழிகொண்டான் வழிகொண்டானே

ஆரணிய காண்டம் முற்றிற்று
விருத்தம்-28 திபதைகள்-11 தருக்கள்-15
சக்கரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம்.