200 ஸ்ரீ மூன்றாவது ஆரணிய காண்டம் (கம்பராமாயணம் ஒப்புமைப் பகுதி) ஸ்ரீ ராமர் அத்திரியைக் கண்டு தண்டகம் சேர்தல் விருத்தம்-1 - திபதை -1 திக்குறு செறிபரம் தணியநின்ற திரள்பொன் கைங்குறுங் கண்மலைபோல் குமரர்காமம் முதலாம் முக்குறும்பு அறஎறிந்த வினை வான்முனிவன் புக்கிறைஞ்சினர் அருந்தவன் உவந்து புகலும் குமரர்நீர் இவண்அடைந்து உதவு கொள்கை எளிதோ அமரர் யாவரொடும் எவ்வுலகும் வந்தது அலவோ எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் தமரெலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் அன்னமா முனியொடன்று அவண் உறைந்து அவன்அரும் பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன் துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன் பொன்னொடு ஏகிஉயர் தண்டக வனம் புகுதலும் (விராதன் வதைப்படலம் 2-4)
விராதன் வதையும் துதியும் விருத்தம்-2 - தரு-1 பூதம் அத்தனையும்ஓர் வடிவுகொண்டு புதிதென்று ஓதஒத்த உருவத்தன் உரும்ஒத்த குரலன் காதலித்து அயன் அளித்த கடையிட்ட கணிதப் பாதலக்கம் மதவெற்பவை படைத்த வலியான் சாரவந்துயல் வியங்கினன் மரங்கள் தரையில் பேரவன்கிரி பிளந்துக வளர்ந்து இகல்பெறா வீரவெஞ் சிலையினோர் எதிர் வீராதன் என்னும்அக் கோர வெங்கண் உரும்ஏறு அனகொடுந் தொழிலினான் நில்லிம் நில்லும் எனவந்து நிணம்உண்ட நெடுவெண் பல்லும் வல்எயிறும் மின்னுபகுவாய் முழைதிறந்து
|