20 வாவிய பெருவெள்ளம் வாவும்கடலிலே வாய்க்காலும் பாயுமல்லோ நில்லாமல் யாவதும் கற்றோர்சொல்லை கேட்கிற நீங்களும் என்சொல்லும் கேளும்தடை இல்லாமல் காவியமும்பஞ்ச லட்சணமுந்தெரிய கற்ற உங்களைப் போலே சொல்லாமல் கேவலம் நான்இதைப் பாகவதர்படிக்கும் கீர்த்தனையாச் சொன்னேன் ஈ தல்லாமல் தேவராமன் பேரே உற்றது தேடி அந்தப்பேர் இந்த நாடகத்தில் வைத்தது பூவோடே கூடியநாரும் மணம் பெற்றது போலே விளங்கும் அதினாலே சொன்னேன் கற்றது (பிழை) 3. திருந்தும் நமசிவாய நாராயணா என்று செபிக்கும் மந்திரம் இரண்டும் மெய்தானே உரைக்கும் மந்திரம் இரண்டில் இரண்டாம் எழுத்திரண்டும் ஒருராமன் ஆகிவந்த பெருமானே அருள்செய்த கதையிதை இலக்கண மாகச்சொல்ல அறிவேனோ சின்னஞ் சிறியனே பரப்பிய பாலையும் சோற்றையும் குழந்தைகள் பாச்சி சோச்சியெனும் படிநானே பொருத்தம் இல்லாச்சொல்லால் உரைசெய்தாலும் தள்ளப் போமே உங்களால் ஆமேதிருத்திக் கொள்ள அரைச்சொல் கொண்டம்பலம் ஏறினால்மெள்ள மெள்ள அரைச்சொல்லும் முழுச்சொல்லாம் ஆகையால்இதில் உள்ள (பிழை) -0- மங்களம் விருத்தம்-6 மூவருக்கும் தேவியர்க்கும் தேவ ரோடு முனிவர்க்கும் முன்னிந்தக் கதையைச் சொன்ன நாவருக்கும் தசரதற்கும் தேவி மார்க்கும் நற்றம்பி மார்களுக்கும் சீதை யோடு ஆவருக்கும் கோவருக்கும் அனுமான் மற்றோர் ஆழ்வார்கள் ஆரியர்ஐம் படைஅ னந்தன் |