21 யாவருக்கும் இதைப்படிப்போர் கேட்போர்க் கெல்லாம் வளஞ்சொல்வான் ராகவன்மங் களஞ்சொல் வேனே. தரு -6 அசாவேரி ராகம் ஆதிதாளம் பல்லவி ஸ்ரீராமச்சந்திரனுக்கு செயமங்களம்-நல்ல திவ்யமுகச் சந்திரனுக்கு சுபமங்களம் (ஸ்ரீராம) அநுபல்லவி மாராபி ராமனுக்கு மன்னுபரந் தாமனுக்கு ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு (ஸ்ரீராம) சரணங்கள் 1 கொண்டல்மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம் கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம் புண்டரீகத் தாளனுக்கு பூச்சக்கிர ஆளனுக்கு தண்டுளவத் தோளனுக்கு சானகிம ணாளனுக்கு (ஸ்ரீராம) 2. கோவைமணி வாயனுக்கு மாயனுக்கு மங்களம் கோதண்ட கையனுக்கு மெய்யனுக்கு மங்களம் தாவுகுண சீலனுக்கு சத்தியவி லாசனுக்கு தேவர்அனு கூலனுக்கு தெசரதன் பாலனுக்கு (ஸ்ரீராம) 3. பகிரண்ட நாதனுக்கு வேதனுக்கு மங்களம் பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம் சகல உல் லாசனுக்கு தருமந்த காசனுக்கு அகிலவி வாசனுக்கு அயோத்தியா லாசனுக்கு (ஸ்ரீராம) பாயிரம் முற்றிற்று ------- வெண்பா-1 விருத்தம்-6 தரு-6 |