பக்கம் எண் :

22

ஸ்ரீ

கம்பராமாயண ஒப்புமைப் பாடல்கள்

இராம நாடகம்

பாயிரம்

அனுமார்-தோத்திரம்

வெண்பா-1 தரு-1

அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர் காக்கஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக்கண் டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றுவைத்தான் அவன்நம்மை அளித்துக்காப்பான்
                                    காப்பு-மிகைப்பாடல் 10

பெருமாள் - தோத்திரம்

விருத்தம் -2 தரு-2

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

ஆதி யந்தம் அரிஎன யாவையும்
ஓதி னார்அல குள்ளன இல்லன
வேதம் என்பன மெய்ந்நெறி நோன்மையான்
பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார்
                             பாயிரம்-கடவுள் வாழ்த்து 1,3

ஒன்றாய் இரண்டு சுடராய் ஒருமூன்றுமாகிப்
பொன்றாதவேதம் ஒருநான்கொடு ஐம்பூதமாகி
அன்றாகி அண்டத்தகத்து ஆகி அப்புறத்துமாகி
நின்றான் ஒருவன்அவன் நீள்கழல் நெஞ்சில்வைப்பாம்

நீலமாம்கடல் நேமியந்தடக்கை
மாலைமால்கெட வணங்குதும் மகிழ்ந்தே

பராவஅரு மறைபயில் பரமன்பங்கயக்
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினால்