202 கைதுணித்தும் எனமுந்து கடுகிப் படர்புயத்து எய்வில்மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் தோள்இரண்டும் வடிவாள் கொடு துணித்து விசையால் மீளி மொய்ம்பினர் குதித்தலும் வெகுண்டு புருவத் தேள் இரண்டும் நெளியச் சினசெங்கண் அரவக் கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும் பட்டதன்மையும் உணர்ந்து படர்சாபம் இடமுன் கட்டவன் பிறவிதந்த கடையான உடல்தான் விட்டு விண்ணிடை விளங்கினன் விரிஞ்சன் எனஓர் முட்டைதந் ததனில் வந்த முதல் முன்ன வனினே வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனநின் பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ ஓதங்கொள் கடலன்றி ஒன்றினோ டொன் றொவ்வாப் பூதங்கள் தொறும் உறைந்தால் அவை உன்னைப் பொறுக்குமோ பனிநின்ற பெரும்பிறவிக் கடல் கடக்கும் புணைபற்றி நனிநின்ற சமயத்தோர் எல்லாரும் நன்றென்ன தனிநின்ற தத்துவத்தின் தகைமூர்த்தி நீயாகின் இனிநின்ற முதல் தேவர் என்கொண்டென் செய்வாரே நீஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள் ஆயாத சமயமும் நின் அடியவே அயல்இல்லை தீயாரின் ஒளித்தியால் வெளிநின்றால் தீங்குண்டோ வீயாத பெருமாயை விளையாட்டும் வேண்டுமோ பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர் இருவினையும் உடையார்போல் இருந்தவம் நின்றியற்றுவாய் திருவுறையும் மணிமார்ப நினக்குஎன்னை செயற்பாலா ஒருவினையும் இல்லார்போல் உறங்குதியால் உறங்காதாய் அரவாகிச் சுமத்தியால் அயில்எயிற்றின் ஏந்துதியால் ஒருவாயில் விழுங்குதியால் ஓரடியால் ஒளித்தியால் திருவான நிலமகளை இஃதறிந்தால் சீறாளோ மருவாரும் துழாய் அலங்கல் மணிமார்பில் வைகுவாள்
|