203 ஒப்பிறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்துறையும் அப்புறையுள் துறந்தடியேன் அருந்தவத்தால் அணுகுதலால் இப்பிறவிக் கடல் கடந்தேன் இனிப்பிறவேன் இருவினையும் துப்புறழும் நீர்த்தசுடர்த் திருவடியால் துடைத்தாய்நீ (விராதன் வதைப்படலம் 17-25, 32, 34, 42, 44, 45, 47, 51, 53, 56, 57, 60)
------ தண்டகவன ரிஷிகள் ஸ்ரீ ராமரோடு முறையிடல் விருத்தம்-3 - திபதை-2 குரவம் குளிர்கோங்கு அலர் கொம்பினோடும் இரவங்கண் உறும்பொழுது எய்தினரால் சரவங்கன் இருந்து தவங்கருதும் மரவம் கிளர்கோங்கு ஒளிர் வாசவனம் செவ்வேலவர் சென்றனர் சேறல்உறும் அவ்வேலையின் எய்தினன் ஆயிரமாம் தவ்வாது இரவும் பொலி தாமரையான் வேவ்றேலர்கண் ணினன்விண் ணவர்கோமான் நின்றான் எதிர்நின்ற நெடுந்தவனும் சென்றான் எதிர்கொண்டு சிறப்பமையா என்தான் இவண் எய்தியவாறு எனலும் பொன்றாத பொலன்கழலோன் புகலும் (சரவங்கன் பிறப்பு நீங்குபடலம் 1, 2, 14) எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்துவந்து ஐயனும் இருந்தனன் அருள் என்என்றலும் வையகம் கரவலன் மதலை வந்ததோர் வெய்ய வெங் கொடுந்தொழில் விளைவுகேள்எனா இரக்கம் என்றொரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர்என் றுளர்சிலர் அறத்தின் நீங்கினார் நெருக்கவும் யாம்படர் நெறியலா நெறி துரக்கவும் அருந்தவத் துறையும் நீங்கினோம்
|