பக்கம் எண் :

204

 
வல்லியம் பலதிரி வனத்து மான் என
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம்
சொல்லிய அறநெறித் துறையும் நீங்கினேம்
வில்லியல் மொய்ம்பினாய் வீடு காண்டுமோ

மாதவத் தொழுகலெம் மறைகள் யாவையும்
ஓதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்
மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கினேம்
ஆதலின் அந்தண ரேயும் ஆகிலேம்

இந்திரன் எனின்அவன் அரக்கர் ஏயின
சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான்
எந்தைமற் றியாருளர் இடுக்கண் நீக்குவார்
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால்

உருளுடை நேமியான் உலகை ஓம்பிய
பொருளுடை மன்னன் புதல்வ போக்கிலா
இருளுடை வைகலெம் இரவி தோன்றினாய்
அருளுடை வீரநின் அபயம் யாம் என்றார்
                          (அகத்தியப் படலம் 11-16)

-----

ஸ்ரீராமர் தண்டகவன ரிஷிகளுக்கு அபயமீதல்

விருத்தம்-4 - தரு-2


புகல்புகுந் திலரேல் புறத்தும் அண்டத்தின்
அகல்வரேனும் என் அம்பொடு வீழ் வரால்
தகவில் துன்பம் தவிருதிர் நீர்எனா
பகலவன் குலமைந்தன் பணிக்கின்றான்

வேந்தன் வீயவும் யாய்துயர் மேவவும்
ஏந்தல் எம்பி வருந்தவும் என்நகர்
மாந்தர் வன்துயர் கூரவும் யான்வனம்
போந்தது என்னுடைப் புண்ணியத்தால் என்றான்

நிரந்த வேதியர் நீவிரும் தீயவர்
கவந்த பந்தக் களிநடம் கண்டிட