206 ஏகியினி அவ்வயின் இருந்துறைமின் என்றான் மேகநிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் பாகனைய சொல்லியொடு தம்பி பிரிவின்பின் போகமுனி சிந்தை தொடரக் கடிது போனான் (அகத்தியப் படலம் 46, 51, 55, 56, 57, 59)
ஸ்ரீராமர் சடாயுவைக் கண்டு பஞ்சவடி தங்கல் விருத்தம்-6 - தரு-3 நடந்தனர் காவதம் பலவும் நல்நதி கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின் தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும் கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சிசேர் அருக்கன் இவ் அகலிடத்து அலங்கு திக்கெலாம் தெரிப்புறு செறிசுடர் சிகையினால் சிறை விரித்திருந் தனன்என விளங்குவான்தனை வினவிய காலையில் மெய்ம்மை அல்லது புனைமலர்த் தாரவர் புகல்கி லாமையால் கனைகடல் நெடுநிலம் கரவல் ஆழியான் வனைகழல் தயர தன்மைந்தர் யாமென்றான் உந்தை உண்மையன் ஆக்கிஉன் சிற்றவை தந்த சொல்லைத் தலைக்கொண்டு தாரணி வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே எந்தை வல்லது யாவர் வல்லார் எனா இறைவ! எண்ணி அகத்தியன் ஈந்துளது அறையும் நன்மணி ஆற்றின் அகன்கரைத் துறையுள் உண்டொரு சூழல் அச்சூழல்புக்கு உறைதும் என்றனன் உள்ளத்துறை குவான் பெரிதும் நன்று அப்பெருந்துறை வைகி நீர் புரிதிர் மாதவம் போதுமின்யானது தெரிவு றுத்துவென் என்றவர் திண்சிறை விரியும் நீழலில் மேவவிண் சென்றனன்
|