பக்கம் எண் :

207

 
வார்ப்பொற் கொங்கை மருகியை மக்களை
ஏற்பச் சிந்தனையிட் டவ்வரக்கர்தம்
சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் சேக்கையில்
பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான்
                       (சடாயு காண்படலம் 1, 2, 18, 34, 39, 41, 42)

அனையதோர் தன்மையான அருவிநீர் ஆற்றின்பாங்கர்
பனிதெரு தெய்வப் பஞ்சவடி எனும் பருவச்சோலை
தனியிடம் அதனை நண்ணித் தம்பியால் சமைக்கப்பட்ட
இனிய பூஞ்சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால்
                       (பஞ்சவடிப் படலம் 7)

சூர்ப்பநகை ஸ்ரீ ராமரைக் கண்டு மோகித்தல்

விருத்தம்-7 - தரு-3 


சிந்தையில் உறைபவற்கு உருவந் தீய்ந்ததால்
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று நான்குதோள்
உந்தியின் உலகளித்தாற்கு என்றுன்னுவாள்

கற்றையம் சடையவன் கண்ணிற் காய்தலால்
இற்றவன் அன்று தொட் டின்றுகாறும், தான்
நற்றவம் இயற்றி அவ் அனங்கன் நல்லுருப்
பெற்றன னாம் எனப் பெயர்த்தும் எண்ணுவாள்

தரங்களின் அமைந்து தாழ்ந்து உயர்ந்த தாலமா
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய
உரங்களின் உயர்திசை ஓம்பும் யானையின்
கரங்களே இவன்மணிக்கரம் என்றுன்னுவாள்

வில்மலை வல்லவன் வீரத்தோ ளொடும்
கல்மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின்
நல்மலை யல்லது நாம மேருவும்
பொன்மலை யாதலால் பொருவலா தென்பாள்

தாள்உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேளுயிர் நாட்டத்தன் கிரியின் தோற்றத் தன்