பக்கம் எண் :

208


தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்லகண் நெடிய மார்பென்றாள்

அதிகம் நின் றொளிரும் இவ்வழகன் வாண்முகம்
பொதியவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ
கதிர்மதி யாமெனின் கலைகள் தேயும் அம்
மதியெனின் அதற்குமோர் மறுவுண் டென்னுமால்

எவன்செய இனியஇவ் அழகைஎய்தினான்
அவம் செயத் திருவுடம்பு அலச நோற்கின்றான்
நவம்செயத் தகையஇந் நளின நாட்டத்தான்
தவம்செயத் தவம் செய்த தவம் என் என்கின்றாள்

உடுத்தநீ ராடையள் உருவச் செவ்வியவள்
பிடிதரு நடையினள் பெண்மை நன்று இவன்
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம்மயிர்
பொடித்தது போலும் இப்புல் என்றுன்னுவாள்

வாள்நிலா முறுவலன் வயங்கு சோதியைக்
காணலனே கொலாம் கதிரின் நாயகன்
சேணெலாம் புல்லொளி செலுத்திச் சிந்தையில்
நாணலன் மீமிசை நடக்கின்றான் என்றாள்

குப்புறற்கு அரியமாக் குன்றை வென்றுயர்
இப்பெருந் தோளவன் இதழுக்கு ஏற்பதோர்
ஒப்பென உலகமே உரைக்க நண்ணுமோ
துப்பினில் துப்புடையாதைச் சொல்லுகேன்

நற்கலை மதியுற வயங்கும் நம்பிதன்
எற்கலை திருவறை எய்திஏமுற
வற்கலை நோற்றன மாசிலாமணி
பொற்கலை நோற்றில் போலுமால் என்றாள்

தொடையமை நெடுமழைத் தொங்க லாமெனக்
கடைகுழன் றிடைநெறி கரிய குஞ்சியைச்
சடையெனப் புனைந்திலன் என்னின் தையலார்
உடையுயிர் யாவையும் உடையுமால் என்றாள்