பக்கம் எண் :

210

ஸ்ரீராமருக்கும் சூர்ப்பநகைக்கும் சம்வாதம்

விருத்தம்-9 - திபதை-4

தீதில் வரவாக திரு நின்வரவு சேயோய்
போதஉள தெம் முழைஓர் புண்ணியம் அதன்றோ
ஏதுபதி ஏதுபெயர் யாவர்உற வென்றான்
வேதமுதல்; பேதையவள் தன்னிலை விரிப்பாள்

பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற
சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின்
மாவெலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்துலகம் மூன்றும்
காவலோன் பின்னை காமவல்லியாம் கன்னி என்றாள்

அவ்வுரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை
செவ்விதன் றறிதலாகும் சிறிதின்என் றுணராச் செங்கண்
வெவ்வுரு அமைந்தோன்மங்கை என்றது மெய்ம்மை ஆயின்
இவ்வுரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான்

தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள் சோர்விலாள் அம்
மாயவல் லரக்கரோடு வாழ்வினை மதிக்க லாதேன்
ஆய்வுறு மனத்தேனாகி அறந்தலை நிற்பதானேன்
தீவினை தீய நோற்றுத் தேவரின் பெற்ற தென்றாள்

தாமுறு காமத்தன்மை தாங்களே உரைப்ப தென்பது
ஆமெனல் ஆவதென்றால் அருங்குல மகளிர்க்கம்மா
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என்செய் கேன்யாரும் இல்லேன்
காமனென் றொருவன் செய்யும் வன்மையைக் காத்தி என்றாள்

நிந்தனை அரக்கிநீதி நிலையலாள் வினைமற் றெண்ணி
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துட் கொண்டான்
சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் துணிவிற் றன்றால்
அந்தணர் பாவை நீயான் அரசரில் வந்தேன் என்றான்

அருத்தியள் அனையகூற அகத்துறு நகையின் வெள்ளை
குருத்தெழு கின்றநீலக் கொண்டல் உண் டாட்டம் கொண்டான்
வருத்தம் நீங்கு அரக்கர்தம்மில் மானிடர் மணத்தல் நங்கை
பொருத்தம் அன்று என்று சாலப் புலமையோர் புகல்வர் என்றான்