211 காந்தர்ப்பம் என்பதுண்டால் காதலின் கலந்த சிந்தை மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் ஏந்தல்பொற் றோளினாய் ஈதியைந்தபின் எனக்கு மூத்த வேந்தர்க்கும் விருப்பிற்றாகும் வேறும் ஓர் உரையுண்டென்றாள் முனிவரோ டுடையர் முன்னே முதிர்பகை முறைமை நோக்கார் தனியைநீ ஆதலால்மற் றவரொடும் தழுவற் கொத்த வினையம் ஈதல்லதில்லை விண்ணும் நின் ஆட்சியாக்கி இனியராய் அன்னர்வந்துன் ஏவலின் நிற்பர் என்றாள் வளைஎயிற் றவர்களோடும் வரும் விளையாட்டென்றாலும் விளைவின தீமையேயாம் என்பதை உணர்ந்து வீரன் உளைவன இயற்றல்; ஒல்லைஉன்நிலை உணருமாகில் இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் (சூர்ப்பணகைப் படலம் 31-34, 38, 42, 44, 46-48, 60) சூர்ப்பநகை தன் உறவை நினைந்து புலம்பல் விருத்தம்-10 - திபதை-5 விடியல் காண்டலின் ஆண்டுதன் உயிர்கண்ட வெய்யாள் படியிலாள் மருங்குள்ளளவு எனையவன் பாரான் கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லைக்கரந்தவள் காதல் வடிவினானுடன் வாழ்வதே வாழ்வு எனமதியா தனியிருந்தனள் சமைந்ததென் கருத்து எனத் தாழ்வுற்று இனியிருந் தெனக்கு எண்ணுவதில் என எண்ணா துனியிருந்த வல்மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் கனியிரும் பொழில் காத்தயல் இருந்தவன் கண்டான் நில்அடீ எனக் கடுகினன் பெண்என நினைந்தான் வில்எடாது அவள் வீங்கெரியாம்என விரிந்த சில்வல் ஓதியைச் செங்கையின் திருகுறப் பற்றி ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளிகிளர் சுற்றுவாளுருவி ஊக்கித்தாக்கி விண்படர்வென் என்று உருத்தெழுவாளை நூக்கி நொய்தினில் வெய்திழையேல் எனநுவலா மூக்கும் காதும் வெம்முரண் முலைக்கண்களும் முறையால் போக்கிப் போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான் |