பக்கம் எண் :

213

ஒருகாலத் துலகேழும் உருத்தெதிரத்தனு ஒன்றால்
திருகாத சினம் திருகி திசையனைத்தும் செலநூறி
இருகாலிற் புரந்தரனை இருந்தளையில் இடுவித்த
மருகாவோ மானிடவர் வலிகாண வாராயோ

கல்லீரும் படைத்தடக்கை அடல்கர தூடணர் முதலா
அல்லீரும் சுடர்மணிப்பூண் அரக்கர் குலத்தவதரித்தீர்
கொல்லீரும் படைக்கும்ப கருணனைப்போல் குவலயத்தில்
எல்லீரும் உறங்குதிரோ யானழைத்தல் கேளீரோ
 (சூர்ப்பணகைப் படலம் 82, 84, 85, 86, 90, 92, 95, 99, 101, 102,104, 105)
 

சூர்ப்பநகை ஸ்ரீ ராமருக்கு மீளவும் இதவுரைத்தல்

விருத்தம்-11 - தரு-5

என்றின்ன பலபன்னி இகலரக்கி அழுதிரங்கிப்
பொன்துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து
நின்றந்த நதியகத்து நிறைதவத்தின் துறைமுடித்து
வன்திண்கைச் சிலைநெடுந்தோள் மரகதத்தின்மலை வந்தான்

செங்கயல்போற் கருநெடுங்கண் தேமருதா மரையுறையும்
நங்கையிவர் எனநெருநல் நடந்தவரோ நாம் என்ன
கொங்கைகளும் குழைகாதும் கொடிமூக்கும் குறைத்தழித்தால்
அங்கணரசே ஒருவர்க் கழியரிதோ அழகென்றாள்

மாப்போரில் புறங்காப்பேன் வான்சுமந்து செலவல்லேன்
தூப்போலக் கனிபலவும் சுவையுடையது தரவல்லேன்
காப்போரைக் கைத்தென்நீர் கருதியது தருவேன்இப்
பூப்போலும் மெல்லியளால் பெருள்என்னோ புகல்வீரோ

போக்கினீர் என்நாசி போய்த்தென்நீர் பொறுக்குவிரேல்
ஆக்குவென் ஓர்நொடி வரையில் அழகமைவென் அருள்கூரும்
பாக்கியம் உண்டெனின் அதனால் பெண்மைக்கோர் பழுதுண்டோ
மேக்குயரும் நெடுமூக்கும் மடந்தையர்க்கு மிகையன்றோ

பொன்னுருவப் பொருகழலீர் புழைகாண
     மூக்கரிவான் பொருள்வே ருண்டா