பக்கம் எண் :

214

இன்னுருவம் இதுகொண்டுஇங் கிருந்தொழியும்
     தம்மருங்கே ஏகாள் அப்பால்
பின்னிவளை அயலொருவர் பாரார் என்றே
     அரிந்தீர் பிழைசெய்தீரோ
அன்னதனை அறிந்தன்றோ அன்புஇரட்டிப்
     பூண்டதுநான் அறிவிலேனோ

காம்புறழும் தோளாளைக் கைவிடீர்
     என்னினும் யான் மிகையோ கள்வர்
ஆம்பொறியில் அடலரக்கர் அவரோடே
     செருச் செய்வான் அமைந்தீராயின்
தாம்பொறியின் பலமாயம் தரும்பொறிகள்
     அறிந்தவற்றைத் தடுப்பேன் அன்றே
பாம்பறியும் பாம்பின கால் எனமொழியும்
     பழமொழியும் பார்க்கி லீரோ

பெருங்குலா உறுநகர்க்கே பெயரும்நாள்
     வேண்டும் உருப்பிடிப்பேன் அன்றேல்
அருங்கலாம் உற்றிருந்தான் என்னினும்ஆம்
     இளையவன்தான் அரிந்த நாசி
ஓருங்கிலா இவளோடும் உறைவேனா
     என்பானேல் இறைவ ஒன்றும்
மருங்கிலா தவளோடும் அன்றோ நீ
     நெடுங்காலம் வாழ்ந்த தென்பாய்
             (சூர்ப்பணகைப் படலம் 106, 111, 120, 122, 125, 131, 133)

சூர்ப்பநகை கரனோடு முறையிடல்

விருத்தம்-12 - தரு-6

இருந்த மாக்கரன் தாளிணையின் மிசை
சொரிந்த சோரியன் கூந்தலள் தூம்பெனத்
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர்மேல்
விரிந்தமேகம் என விழுந்தாளரோ

அமுங்குநாள் இதென்று அந்தகன் ஆணையால்
தழங்குபேரி எனத்தனித் தேங்குவாள்
முழங்குமேகம் இடிந்த வெந்தீயினால்
புழுங்கு நாகம் எனப்புரண் டாளரோ