215 இருவர் மானிடர் தாபதர் ஏந்திய வரிவில் வாள்கையர் மன்மதன் மேனியர் தருமநீரர் தயரதன் காதலர் செருவில் நேரும் நிருதரைத் தேடுவார் ஒன்றும் நோக்கலர் உன்வலி ஒங்கறன் நின்றுநோக்கி நிறுத்தும் நினைப்பினார் வென்றி வேற்கை நிருதரை வேரறக் கொன்று நீக்குதும் என்றுணர் கொள்கையார் மண்ணில் நோக்க அருவானினில் மற்றினில் எண்ணி நோக்குறின் யாவரும் நோக்கிலாப் பெண்ணின் நோக்குடையாள் ஒருபேதைஎன் கண்ணின் நோக்கி உரைப்பருங் காட்சியாள் கண்டு நோக்கங் காரிகையாள் தனைக் கொண்டு போவல் இலங்கையர் கோக்கெனா விண்டுமேல் எழுந்தேனை வெகுண்டு தண்டம் ஆக்கினர் மூக்கெனச் சொல்லினாள் (திருசிரா வதைப்படலம் 1, 2, 4-7) காதூஷணத் திரிசிரர்களின்வதை விருத்தம்-13 தரு-7 துமிலப் போர்ல்வல் லாக்கர்க்குச்சுட்டினாள் அமலத் தொல்பெயர் ஆயிரத் தாழியான் நிமலப் பாத நினைவில் இருந்தஅக் கமலக் கண்ணனைக் கையினிற் காட்டினாள் வாங்கி வாளொடு வாளிபெய் புட்டிலும் தாங்கி தாமரைக் கண்ணன் அச்சாலையை நீங்கி இவ்வழி நேர்மின் அடாஎனா வீங்கு தோளன் மலைதலை மேவினான் மரங்கற் போல்நெடு வாளொடு தோள்விழ உரங்களால் அடர்ந்தார் உரவோன் விடும் சரங்கள் ஓடின தைக்க அவர்கள்தம் சிரங்கள் ஓடின தீயவள் ஓடினாள் |