பக்கம் எண் :

216

ஒளிறு வேற்கரற்கு உற்றது உணர்த்தினாள்
குளிறுகோப வெங்கோ ளரிமா அட
களிறெலாம் படகைதலை மேலுற
பிளிறி ஓடும் பிடியன்ன பெற்றியாள்

அங்கரக்கர் அவிந்தழிந்தார் எனப்
பொங்க ரத்தம் விழிவழிப் போந்துக
வெங்கரப் பெயரோன் வெகுண் டான்விடைச்
சங்கரற்கும் தடுப்பரும் தன்மையான்

அழைஎன்தேர் எனக்குஆக்கு வெம்போர்ப்படை
உழையர் ஓடி ஒருநொடி உம்பல்மேல்
மழையின் மாமுரசு எற்றுதிர் வல்லென்றான்
முழையின் வாளரி அஞ்ச முழங்குவான்

காடுதுன்றி விசும்பு கரந்தென
நீடிஎங்கும் நிமிர்ந்த நெடுங்கொடி
ஓடும்எங்கள் பசிஎன்றுவந்து எழுந்து
ஆடுகின்ற அலகையின் ஆடவே

ஆன்றமை எறிபடை அழுவத்தார்கலி
வான்தொடர் மேருவை வளைத்த தாம்என
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன்
தோன்றினன் கரன்நமன் துணுக்கம் எய்தவே

மரம்படர் கானம் எங்கும் அதர்படவந்த சேனை
கரன்படை என்ப தெண்ணிக் கருநிறக் கமலக்கண்ணன்
சரண்படர் புட்டில் கட்டிச் சாபமும்தரித்தான் தள்ளா
உரன்படர் தோளில்மீளாக் கவசமிட் டுடைவா ளார்த்தான்

மானிடன் ஒருவன் வந்தவலிகெழு சேனைக்கம்மா
கானிடம் இல்லைஎன்னும் கட்டுரைகலந்த காலை
யானுடை வென்றி என்னாம் யாவரும் கண்டுநிற்றீர்
ஊனுடை இவனையானே உண்குவென் உயிரை என்றான்

என்னுமாத்திரத்து எறிபடை இடியென இடியா
மன்னர் மன்னவன் மதலையை வளைந்தன வனத்து
மின்னும் வாலுளைமடங்கலை முனிந்தன வேழம்
துன்னி னாலெனக் கடுசினத்து அரக்கர்தம் தொகுதி